பணக்காரர்கள் வங்கிகளுக்கு ஏன் போகவில்லை?

னிப்போ, கசப்போ அதன் பெயர் மருந்து. அதையும் அருந்தச் சொல்வது அரசன் என்கிறபோது மக்கள் ஏற்கத்தான் வேண்டும். பழைய ஆயிரமும்,  ஐநூறும் செல்லாது என்ற ‘அரச’ அறிவிப்புக்கு இதுதான் இப்போதைய சமாதானமாக இருக்க முடியும். ஆனால், ஒட்டுமொத்த மக்களும் இந்த மருந்தை ஒன்றே போல்தான் சுவைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் நவம்பர் 9-ம் தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து இதை எழுதுகிற நிமிடம்வரை வங்கிகளின் வாசலில் நின்றுகொண்டுதான் இருக்கின்றனர். அனைவரின் கைகளிலும் 5 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரையில், அவ்வளவும் பழைய ரூபாய் நோட்டுகள்.

நபர் ஒருவர் ரூ.4 ஆயிரம் வரையில்தான் வங்கிகளில் பணத்தை எடுக்க அனுமதி என்பதால் ஆதார் அட்டை உள்ளிட்ட போட்டோ அடையாள அட்டைகளைக் காட்டினால் 2 முழு ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வங்கிகளில் கொடுக்கிறார்கள்.
அதற்குக் குறைவான சில்லறைகளை பல இடங்களில் தருவது இல்லை. நூறு, ஐநூறு, ஆயிரங்களாக வாடிக்கையாளர் கேட்டால் வங்கிகளுக்கு இன்னும் கைவசம் போதுமான பணம் வந்து சேரவில்லை என்ற காரணத்தையும் சொல்கிறார்கள்.
வங்கிகளில் போடுவதென்றால் லட்சத்தில் ஆரம்பித்து கோடிகள் வரையில் போடலாம், அதற்குத் தடையில்லை.

வங்கிகளில், அரசு அறிமுகம் செய்துள்ள புதிய ரூபாய் நோட்டுகளை எடுப்பது, போடுவது, அடையாள அட்டையை கொடுப்பது போன்ற விஷயங்கள் எல்லாமே ஏழை மக்கள் சார்ந்த விஷயங்களாக மட்டும் இருக்கின்றன.

பணம் இருக்கிறவர்கள், வங்கிப் பக்கம் தென்படவே இல்லை. அரசியல்வாதிகளோ, தொழில் அதிபர்களோ, சினிமா நட்சத்திரங்களோ வங்கி வரிசையில் காணவில்லை. அவர்களிடம் இருக்கிற பணத்தை யார் மாற்றுகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வியாக இப்போது எழுந்துள்ளது.

சென்னையின் முக்கிய வணிகமையமாக திகழும் தியாகராயர் நகர், சௌகார்பேட்டை, புரசைவாக்கம், மண்ணடி, தாம்பரம் போன்ற இடங்களில் நேரடி விசிட் அடித்ததில் கிடைத்த தகவல்களைவிட, வங்கிகளில் நடக்கும் பரிவர்த்தனை உச்சகட்ட திகில்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்