அறிவியல் அ முதல் ஃ வரை

ஆத்மா கே.இரவி, ஆயிஷா இரா.நடராசன்விமர்சனம்

றிவியல் என்று சொல்லும் போதே கடினமானதாக உணர்கிறோம். ஆனால், அறிவியல் இல்லாமல் சமூகம் இல்லை. சமூகச் சார்பு இல்லாதது அறிவியலும் இல்லை. இது பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களோடு முடிந்துவிடுவதும் இல்லை. அறியும் திறன் இருக்கும் வரைக்கும் அறிவியல் படித்தாக வேண்டும். அறிவியல் என்றாலே எல்லோரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்பங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமூகத்தின் முகத்தை வளர்ச்சியுடனும் தொழில்நுட்ப ரீதியுடனும் எளிமையாகவும் துல்லியமாகவும் நகர்த்திச் செல்வதே அறிவியல்.

அந்த அறிவியல், அனைவரும் படித்தாக வேண்டிய வாழ்க்கை வழிகாட்டியாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது. அத்தகைய வரலாற்றுத் தேவையை நிறைவுசெய்யும் நோக்கத்தோடு ஆத்மா கே.இரவி, ஆயிஷா இரா.நடராசன் ஆகிய இருவரால் இந்த அறிவியல் களஞ்சியம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முனைவர்கள் அ.வள்ளிநாயகமும், த.வி.வெங்கடேஸ்வரனும் செம்மை யாக்கம் செய்துள்ளார்கள். இவர்கள் நால்வருமே அறிவியலாளர்கள்; சமூக நோக்கம் சார்ந்த எழுத்தாளர்கள்.

அறிவியல் பதங்களுக்கான ஆங்கிலம், தமிழ் பொருட்குறிப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அவை உருவான ஆண்டுகள், கண்டுபிடிப்பு களுக்கு முன்னதான தோற்ற மூலங்கள் கொண்டதாக இந்த அறிவியல் தமிழ்க் களஞ்சியம் உருவாக்கப்பட்டு உள்ளது. கண் என்று சாதாரணமாகச் சொல்கிறோம். கண் இமை, கருவிழி, கண் பாவை, பார்வை, கோடு போன்ற நரம்புகளும் பட்டை நரம்புகளும் அதில் இருக்கின்றன. ஒன்றைப் பார்க்கும்போது இவை அத்தனையும் இயங்குகின்றன. இந்த நரம்புகள் மூலம் மூளை தகவலைப் பெறுகிறது. இத்தகைய காட்சிகள் நமக்குக் கிடைக்கின்றன. அறிவியல் என்பது வெறும் தகவல்களின் திரட்டலாக இல்லாமல், சிந்தனையை விருத்திச் செய்வதாக அமைய வேண்டும். அத்தகைய தகவல்கள் இதில் விரவிக் கிடக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்