அருண் ஜெட்லி வைத்த பொறி... அன்புநாதன் தெறி!

ஏய்ப்பு

ன்புநாதன் விவகாரத்தில் அடுத்த அஸ்திரத்தை எடுத்துள்ளது அமலாக்கத் துறை. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.4.77 கோடி ரூபாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அது, இப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டில் ரெய்டு நடக்கும் அளவுக்குப் போனது. அந்தப் பணம் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமானது. விசுவநாதனின் மகன் அமர்நாத் மூலம் அன்புநாதனுக்கு வந்ததாக வருமானவரித் துறை வட்டாரம் அறிவித்து அதிர்வலைகளை உண்டாக்கியது. சோதனை, விசாரணை எனப் போய்க்கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில், வெளிநாடுகளில் பணம் பதுக்கியதாக அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது மத்திய அமலாக்கத் துறை. அடுத்து, கைது படலம் நடக்கும் என்பதுதான் ஹாட் டாபிக்.

கன்சல்டன்ஸி டு தாய்லாந்து தீவு

கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனுக்குச் சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் சோதனை நடத்தியது தேர்தல் பறக்கும் படை. அப்போது, பணம் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு வருமானவரித் துறையினர் நுழைந்து சோதனை போட்டதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. முக்கியப் புள்ளிகள் வாங்கிக் குவித்த சொத்துக்களின் ஆவணங்கள், வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணப் பரிமாற்றங்கள், அந்த வீடுகளில்  பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். அதை ஆய்வு செய்ததில், நத்தம் விசுவநாதன், அவரது மகன் அமர்நாத், ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத்குமார், வைத்திலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் அன்புநாதனுக்கு நெருக்கமாக இருந்தது அம்பலமானது. அடுத்தடுத்த விசாரணையில் சாதாரணமாக ஆட்டோ மொபைல் கன்சல்டன்ஸி வைத்திருந்த அன்புநாதன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்திருப்பதும் தாய்லாந்தில் தீவு மற்றும் துபாய் டய்ரா சிட்டியில், அடுக்குமாடி வணிக வளாகம் வைத்திருப்பதையும் கண்டு வாயடைத்துப் போனது வருமானவரித் துறை. அவர்களது ஆய்வில் அன்புநாதன் கடந்த 4 வருடங்களில் மட்டும் 90 நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறார் என தெரிந்தது. ஒரு கார் வாங்குவதில் தொடங்கிய அறிமுகம், நத்தம் விசுவநாதன் மூலம் அடுத்தடுத்து அமைச்சர்கள் என நீண்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில், நத்தம் விசுவநாதனின் நம்பிக்கையைப் பெற்ற அன்புநாதன் மூலம், அமர்நாத் அடுத்தடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

அருண் ஜெட்லி வைத்த பொறி!

வருமானவரித் துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். மலைக்க வைக்கும் அளவுக்கு செய்தி களைக் கொட்டினார்கள். ‘‘ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ முடித்த அமர்நாத், சென்னை அடையாறில் 10 கோடி முதலீட்டில் தனது நண்பரான ஸ்ரீராம் உடன் சேர்ந்து பிரிமியர் இன்டியா இன்ஃப்ரா பிரைவேட் லிமிட்டெட் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். ரியல் எஸ்டேட், பிரமாண்டமான அப்பார்ட்​மென்ட்கள் கட்டி விற்பது என பிசினஸை வளர்த்தார். அப்பாவின் தயவு இருந்ததால் வளர்ச்சி விண்ணை முட்டியது. பிரிமியர் பிராப்பர்டிஸ், எஸ்.எஸ்.எல்.எஃப். ஃபவுண்டேஷன் என்கிற பெயர்களில் சென்னை ஓ.எம்.ஆர். சாலை, கொளத்தூர், மடிப்பாக்கம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மேல்மருவத்தூர், பூந்தமல்லி எனப் பல இடங்களில்  நிலங்களை வாங்கி விற்று வருகின்றனர்.

அமர்நாத்தும் அன்புநாதனும் சேர்ந்து சென்னை தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வணிக வளாகங்களை வாங்கிக் குவித்துள்ளார்கள். அன்புநாதனுக்கு மட்டும் 4 மிகப் பெரிய வணிக வளாகங்கள் உள்ளன. துபாய் டய்ரா சிட்டியில் 1,900 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் வாங்கியுள்ளனர். அவை முக்கியப் புள்ளிகளுக்காக வாங்கப்பட்டது. அதன் அருகிலேயே 10 ஆயிரம் கோடி மதிப்பில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கான பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை துபாயைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் நடத்தி வருகின்றார்கள். இதன் மொத்த முதலீடு 60 ஆயிரம் கோடிக்கு மேல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்