கணவர் ஆட்சி... திருட்டு(திருச்சி) மாநகராட்சி!

ஊழல்ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ரசியலில், திருச்சி என்றால் திருப்புமுனை என்பார்கள். அதனால்தான், தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை மாநகரமான திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக மாற்ற முயற்சி எடுத்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.! இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோ,  கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில்தான் போட்டியிட்டார். ஆக, அரசியல் தலைவர்களுக்கெல்லாம் திருப்புமுனையாக உள்ள திருச்சி, தற்போது வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறதா?

காங்கிரஸ் தொடர்ச்சியாகத் தக்கவைத்திருந்த திருச்சி மாநகராட்சியைக் கடந்த 2011-ல்தான்  அ.தி.மு.க கைப்பற்றியது. அந்த மேயர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.ஆர்.ஜெயா, 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகள் திருச்சி மாநகரம் முதல்வரின் கண் பார்வையில் இயங்கியதால், ஏராளமானத் திட்டங்களைக் கொண்டுவருவார் என ஜெயாவை மக்களும் நம்பினார்கள். ஆனால், அத்தனையும் புஸ்ஸாகிப்போனதுதான் மிச்சம்.

யார் இந்த ஜெயா?

திருச்சி நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை நடத்துவதில் ஃபேமஸ் ஆனவர் வழக்கறிஞர் எம்.எஸ்.ராஜேந்திரன். அரசு வழக்கறிஞரான ராஜேந்திரன், வழக்குகளைச் சரியாக நடத்தவில்லை, குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, அரசு வழக்கறிஞர் பதவியை இழந்தார்.

“தேர்தலில் வெற்றிபெற்று மேயராகப் பொறுப்பேற்ற ஜெயா, மேற்கொண்ட முதல் வேலை... முன்னாள் மேயரான சுஜாதாவிடம் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரைச் சந்தித்து, ‘சுஜாதா மேயராக இருந்தபோது எங்கெல்லாம் கமிஷன் வாங்கினார்’ என்பதுபோன்ற பால பாடங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான். பின்னர் அதே வழியில் சென்று மேயர் சீட்டுக்காகத் தான் செலவிட்ட பணத்தையெல்லாம் மீட்டெடுக்க ஆரம்பித்தார் ஜெயா. ஆரம்பத்தில், ‘போட்ட காசை எடுக்கணும்’ என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட ஜெயா, இப்போது ‘வந்தவரை லாபம்’ என செயல்படுகிறார்” என பொறுமுகிறார்கள் திருச்சிவாசிகள்.

கணவர் ராஜ்யம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஜெயா வாக இருந்தாலும், மாநகராட்சியைப் பொருத்தவரை அவரது கணவர்தான் எல்லாம். மாநகராட்சி அலுவலர்கள் கூட்டம், அரசு நிகழ்ச்சிகள், கட்சி விழாக்கள் என அனைத்திலும் தம்பதி சமேதராகத் தான் பங்கேற்பார்கள். மேயர் ஜெயாவின் செல்போன் எப்போதும் ராஜேந்திரனிடமே இருக்கும். மேயர் சார்பாக எல்லோரிடமும் பேசுவதும் அவர்தான். மேயர் அறையில் உட்கார்ந்துகொண்டு அதிகாரிகளை அழைத்து அதட்டுவது, எந்த கோப்புகளில் மேயர் கையெழுத்து போடவேண்டும் என்பதுவரை அனைத்து டீலிங்குகளையும் அந்த அறையில் இருந்தே முடித்துவிடுவார் ராஜேந்திரன்.

‘திருச்சி மாநகராட்சியில் பணி புரியும் சுமார் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைக் கடிதத்தில் மேயர் உள்ளிட்ட நியமன உறுப்பினர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகக் கையெழுத்துப் போடாமல் இழுத்தடிக்கிறார்கள்’ எனக்கூறி சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் போராட்டக்காரர்களை மேயர் அறைக்கு அழைத்தார் ராஜேந்திரன். அங்கே பேச்சுவார்த்தை என்ற பெயரில், ஊழியர்களை அவர் மிரட்டியதாக மீடியாவில் செய்தி வந்ததையடுத்து, சத்தமில்லாமல் கோப்புகள் கையெழுத்தானது தனிக்கதை.

கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்