உட்டாலங்கடி உள்ளாட்சித் தேர்தல்!

விதிமீறல்

‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா’ என மார்த்தட்டிக் கொள்வதற்கான அடிப் படையே உள்ளாட்சி தேர்தல்தான்! ஆனால், அதை போயஸ் கார்டனில் தீர்மானிக்கும் அளவுக்கு மாற்றிவிட்டார்கள். ‘தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கிக் கிடக்கிறது’ என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் தேர்தல்களை நடத்துவது ‘இந்திய தேர்தல் கமிஷன்’. உள்ளாட்சித் தேர்தல்களுக்கும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் ‘மாநில தேர்தல் ஆணையங்கள்’தான் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் கொண்டவை. நாடாளுமன்றம், சட்டசபைத் தேர்தல்களைவிட ‘மாநில தேர்தல் ஆணையம்’ நடத்தும் உள்ளாட்சித் தேர்தல்கள் மிகவும் கடினமான வேலை. கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்டப் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், மேயர்கள், தலைவர்கள் என தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு தேர்தலை நடத்துகிறது ‘மாநில தேர்தல் ஆணையம்’. இந்தத் தேர்தலை நடத்துவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புதான், ‘மாநில தேர்தல் ஆணையம்’. ஆனால், இந்த ஆணையம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசின் பிடிக்குள்தான் இருக்கிறது என்கிற விமர்சனம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவாக எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்...

ஆதரவு 1: வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்கு ஒரு மாதம் முன்போ அல்லது  இரண்டு வாரங்களுக்கு முன்போ தான் தேர்தல் தேதியே அறிவிப்பார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது மார்ச் 5. வேட்பு மனு தாக்கல் தொடங்கியது ஏப்ரல் 22. தேர்தல் நடந்தது மே 16-ம் தேதி. இவ்வளவு இடைவெளி தரப்பட்டு அப்போது தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இப்போது உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல்நாள் இரவு 6 மணி. அடுத்த நாள் காலை வேட்புமனுத் தாக்கல் தொடக்கம். அதாவது 15 மணி நேர இடைவெளியில் கட்சிகள் தயாராவதற்கு நேரமே கொடுக்காமல் குறுகிய கால இடைவெளிக்குள் தேர்தல் தேதி அறிவிக்க காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அட்டவணை வெளியிடப்பட்ட 15 மணி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது எதிர்க் கட்சிகளைத் திணற வைக்க வேண்டும் என்ற நோக்குடன்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆதரவு 2: மாநில அரசு எல்லா திட்டங்களையும் அறிவிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என சொல்கிறது தேர்தல் ஆணையம். இலவச வை பை வசதி, அம்மா உணவங்கள் என தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரையில் ஆளும் கட்சி அறிவிப்புகளையும் திட்டங்களையும் நிறைவேற்ற வாய்ப்பு தந்தது தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி கடந்த வாரமே அறிவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கு ஏற்றார்போல் தமிழக அரசின் பன்முகத் திட்டங்ளை முதல்வர் தொடர்ச்சியாகத் தொடங்கி வைத்தவண்ணம் இருந்தார். மேலும், அ.தி.மு.க-வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காக விருப்ப மனுக்களும் கடந்த 10 தினங்களுக்கு முன்பே தொடங்கி மாவட்டம் தோறும் நிர்வாகிகள் விருப்பமனுக்களைப் பெற்று வந்தனர். எல்லாம் சுபமாக முடிந்துவிட்டது என தெரிந்ததும் விழித்துக்கொண்டு தேர்தல் தேதி அறிவித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்