போயஸ் முதல் அப்போலோ வரை!

1989 மார்ச் 25-ம் தேதி, சென்னை தேவகி மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அப்போது அவர் எதிர்க் கட்சித் தலைவர். சட்டசபையில் நடந்த தாக்குதலுக்கு ஆளாகி அப்போது அட்மிட் ஆனார். அதன்பிறகு, 27 ஆண்டுகள் கழித்து, 2016 செப்டம்பர் 22-ம் தேதி  சென்னை, கிரீம்ஸ்  ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். அந்தப் பரபரப்பு நிமிடங்கள்...

செப்டம்பர் 22-ம் தேதி இரவு...

22-ம் தேதி இரவு 9 மணிவரை, போயஸ் கார்டன் வேதா நிலையம், மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. அந்த நாள் அசாதாரணமாக மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இரவு 9 மணிக்குப் பிறகு, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் போயஸ் கார்டனில் குவிந்துள்ளனர் என தகவல்கள் வந்தன. அப்போது, போயஸ் கார்டனில் சசிகலாவும் இளவரசியும் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்