கடுகைக் காப்போம்... காந்தியாய் எழுவோம்!

மோசடி

ந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருந்த 1916-ம் ஆண்டு அது. பிரிட்டிஷ் அரசு பீகார் மாநிலத்தில், அதுவும் குறிப்பாக சம்பரான் பகுதியில், விவசாயிகளை இண்டிகோ பயிர் வளர்க்கச் சொல்லி வற்புறுத்துகிறது. அப்படி விளைந்த பயிர்களையும் மிகவும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்துகொள்கிறது. நிலத்தில் உணவுப் பயிர் இல்லை... சந்தையில் வாங்கலாம் என்றால் காசும் இல்லை... எங்கும் வறுமை. ஏழை விவசாயிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 1917-ம் ஆண்டு, ராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி, காந்தியைச் சந்திக்கிறார். தங்கள் ஊருக்கு வந்து, இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துமாறு அழைப்புவிடுக்கிறார். காந்தி, அந்த ஏழை விவசாயியின் கோரிக்கையைப் புறந்தள்ளவில்லை. சம்பரான் பகுதி விவசாயிகளுக்காக ஒரு சத்தியாகிரகப் போராட்டத்தை நிகழ்த்தினார். இந்த சம்பவம் நடந்து சரியாக 100 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மீண்டும் அது போல ஒரு சத்தியாகிரகப் போராட்டத்தைக் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர்  2-ம் தேதி நிகழ்த்திக் காட்ட அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த முறை அது, ‘விதை சத்தியாகிரகம்’.

ஏன் ‘விதை சத்தியாகிரகம்...?’

விதை சத்தியாகிரகம் போராட்டத் தைத் தமிழகத்தில் ஒருங்கிணைக்கும் ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் அனந்து, “ஒரு சில தனிநபர்களின் நலன்களுக்காக... ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் அடகுவைக்கும் அப்போதைய அரசின் கொள்கைக்கு எதிரான சத்தியாகிரகம் அது. சுதந்திரம் பெற்ற பிறகும், விவசாயிகளுக்கு எதிரான அதே கொள்கைதான் உயிர்ப்புடன் இருக்கிறது. அனைத்து விதைகளின் உரிமையையும் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு அளித்து விட்டு, அவர்களைச் சார்ந்தே சமூகத்தை இருக்க வைக்கும் முயற்சியில் தான் அரசு இருக்கிறது. அதை தடுக்கத்தான் இந்த ‘விதை சத்தியாகிரகம்’.

நாங்கள் சென்னையில், ‘கடுகு திருவிழா’ என்ற பெயரில், இந்த விதை சத்யாகிரகத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.  பெருநிறுவனங்கள் இந்திய சந்தையில் அடுத்துக் குறிவைத்து இருப்பது கடுகைத்தான். டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘டி.எச்.எம். 11’ என்ற ரகத்தோடு மூன்று வகையான மரபணு மாற்றுக் கடுகு ரகங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக் கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது.

பி.டி பருத்தியைக் கொண்டு வந்தபோது இதைப் பூச்சி தாக்காது, நிறைவான லாபம் கிடைக்கும் என்றெல்லாம் தேன் தடவிப் பேசினார் கள். ஆனால், இறுதியில் என்ன நடந்தது? அந்த நிறுவனங்களே, பி.டி பருத்தியை பூச்சி தாக்கியதை ஒப்புக் கொண்டார்கள்தானே. இப்போது, மீண்டும் அதே போன்ற வார்த்தை களைத்தான் கடுகு விஷயத்திலும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார் கள். விவசாயிகளுக்கு பி.டி கடுகு நல்லது, நல்ல லாபம் வரும், அவர்கள் வாழ்வாதாரம் உயரும் என்று மீண்டும் முதலிலிருந்தே தொடங்குகிறார்கள். பி.டி பருத்தியைக் கொண்டுவந்த பிறகுதான் மானாவாரி விவசாயிகளின் தற்கொலை அதிகரித்தது” என்கிறார்.

மரபணு தொழில்நுட்பத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் அரச்சலூர் செல்வம், “இவர்கள் பி.டி கடுகுக்கு அனுமதி கொடுப்பதற்கு சொல்லும் இன்னொரு காரணம், கடுகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம் என்பது. ஆனால், இந்தியாவில் கடுகு எண்ணெய் பயன்படுத்துபவர்கள் எத்தனை சதவிகிதம்?” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்