கொலை... கொள்ளை... வன்முறை... வேடிக்கை பார்த்த போலீஸ்!

கோவையில் மீண்டும் 1998?மதவாதம்

கோவையில் மீண்டும் 1998 திரும்புமோ... இன்னொரு குஜராத் ஆக மாறுமோ என்ற பீதியை, இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலையை அடுத்து அங்கு  நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.

1997-ம் ஆண்டு செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் கொலை செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து கோவையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. 1998-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்தத் துயரங்களுக்குப்பின், 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இடைப்பட்டக் காலத்தில், பல மாற்றங்களை கோவை நகரம் கண்டிருக்கிறது. ஆனால், அன்றைக்கு நிலவிய அச்சம் மட்டும் மக்களிடம் இருந்து அகலவில்லை. இந்த நிலையில், இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கோவையில் கடந்த 22-ம் தேதி கொலைசெய்யப்பட்ட பிறகு, கோவை நகரத்தைப் பதற்றம் பற்றிக்கொண்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இந்துத்வ அமைப்புகளால் பந்த் அறிவிக்கப்பட்டது. பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. மிரட்டல் மற்றும் கல்வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கடைகள் மூடப்பட்டன. பஸ் போக்குவரத்து முடங்கியது. அதே நேரத்தில், பிரேதப் பரிசோதனைக்காக சசிக்குமார் உடல் வைக்கப்பட்டு இருந்த கோவை அரசு மருத்துவமனையில் இந்து முன்னணியினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடினர். திடீரென அங்கிருந்து, டவுன் ஹால் நோக்கி ஒரு கும்பல் புறப்பட்டது. கடைகள், வாகனங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இஸ்லாமியர் கடைகளே இலக்கு!

இஸ்லாமியர்களின் கடைகளும் வாகனங்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு பதற்றம் நிலவியது. ஒரு இடத்தில் இஸ்லாமியர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கலவரம் வெடிக்கும் என்ற அச்சம் ஏற்பட, வன்முறையாளர்களை போலீஸார் விரட்டினர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, சசிக்குமாரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து துடியலூருக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்ல போலீஸ் அனுமதித்தது. 10 கி.மீ. தூரம், ஆயிரக்கணக்கானோர் உடலோடு ஊர்வலம் சென்றனர். அரசு மருத்துவமனையில் தொடங்கி, செல்லும் வழியெங்கும் கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பெரும்பாலும், இஸ்லாமியர்களின் கடைகளே தாக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்