கார்ப்பரேட் கோடரி ( மண் மீதான வன்முறையின் வரலாறு)

நக்கீரன்விமர்சனம்

ரு பிடி மண்ணை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், வண்டி வண்டியாக மண்ணை வீணடிக்க முடியும். காடுகளை அழித்தோம். அது மழையை அழித்தது. மணல்களைச் சுரண்டினோம். அது ஆறுகளின் உயிரைப் பறித்தது. மலைகளை உடைத்தோம். அது நிலத்தின் தன்மையைச் சிதைத்தது. இவை அனைத்தையும் பணத்துக்காகச் செய்தோம். அந்தப் பணத்தால் இதனை உருவாக்க முடியுமா? இயற்கை கேட்கும் கேள்விக்கு இதுவரை யாராலும் பதில் சொல்ல முடிய வில்லை. முடியவும் முடியாது.

‘‘மனிதர்களின் முதல் உற்பத்தி தொடங்கியது மண்ணில்தான். ஆனால் இன்றைய நவீன உற்பத்தி முறை சீரழித்துக் கொண்டிருப்பது இதே மண்ணைத்தான். முன்னது இயற்கை எனில் பின்னது செயற்கை. உலகமயமாக்கலின் பணப்பசிக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் புதைந்து கிடப்பது இந்த மண்ணுக்குள்தான் என்பதால் கார்ப்பரேட்டுகள் உலகெங்குமுள்ள மண்ணை வேட்டையாடத் தொடங்கியுள்ளன. முதலில் பிற உயிரினங்களை பலியாக்கத் தொடங்கியது இது. இறுதியில் மனிதரையும் காவு வாங்கிவிட்டது. ஆதித் தொழிலான வேளாண்மையைச் செய்துவரும் உழவர்கள்தான் இதில் முதன்மைப் பலி” என்ற முன்னுரையுடன் சூழலியலாளர் நக்கீரன் எழுதிய எச்சரிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம். ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் இவை.

இந்திய வேளாண்மைக்கு எத்தனை ஆயிரம் வயது இருக்கும்? எத்தனை ஆயிரம் வயது ஆனாலும் நாம் இந்த  மண்ணை அப்படியே பாதுகாத்து வந்துள்ளோம். கடந்த நூற்றாண்டு வரை எந்தத் தவறுமே செய்யவில்லையா? செய்திருக்கிறோம். ஆனாலும் மண்ணின் குணத்தை அப்படியே பாதுகாத்து வந்துள்ளோம். இந்த நூற்றாண்டு நவீன தொழில்நுட்பம் என்ற பெயரால்.. மண்ணைச் சிதைத்தோம். எப்படிச் சிதைத்தோம் என்ற சதியைத்தான் நக்கீரன் இந்தப் புத்தகத்தில் கண்ணீரோடு விவரிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்