மிஸ்டர் மியாவ்

ரஜினி Vs சாஜோன்

ஷங்கரோட ‘2.0’ படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லன், வடநாட்டு அக்‌ஷய்குமார். இன்னொரு வில்லன், அவ்விட நாட்டு கலாபவன் சாஜோன். ‘பாபநாசம்’ படத்தின் மலையாள ஒரிஜினல், ‘த்ரிஷ்யம்’ படத்தில் போலீஸாக நடித்தவர் கலாபவன் சாஜோன்.

விஷால் Vs வரலட்சுமி

வருங்காலக் கணவர் என்று விஷாலின் கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில்,  உற்சாகமாகப் பங்கேற்றார், வரலட்சுமி. நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் நீக்கம் என விஷால் அறிவித்தது முதல் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் முட்டல்மோதல் ஆரம்பித்து, பிரேக்-அப் நிலைக்கு வந்து​விட்டது.

அனிருத் Vs தனுஷ்

ஐஸ்வர்யாவின் அத்தை மகன் என்பதால், அனிருத்துடன் தனுஷுக்கு அநியாய நெருக்கம். இப்போது ஏனோ, இருவரும் எம்.ஜி.ஆர் - எம்.என்.நம்பியார்போல. பீப் பாடல் பிரச்னைக்குப் பிறகும் சிம்புவுடன் நெருக்கம் காட்டுவதும், சிவகார்த்திகேயனுடன்  சுற்று​வதும் தனுஷுக்குப் பிடிக்கவில்லையாம்.அனிருத், பல சமாதானப் புறாக்களை அனுப்பியும் அவற்றை ஃப்ரை செய்து சாப்பிட்டுவிட்டாராம், தனுஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்