வீட்டை அடமானம் வைத்து கோட்டை கட்டியவர்...

வேலூர் மேயரின் வில்லங்க ஆட்சி!ஊழல்

2011-ல் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு ஆரம்ப மானதும், வேலூர் மேயர் சீட் பிடிக்க அன்றைய அமைச்சர் விஜய் மற்றும் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் வீரமணி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், கார்த்தியாயினி. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவந்த கார்த்தியாயினி, வேலூர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேயருக்குப் போட்டியிட சீட் கிடைத்த உடன், தேர்தல் செலவுக்காக வீட்டையே அடமானம் வைத்தார்.  ‘அரசியல் அனுபவம் எதுவும் இல்லாமல், நேரடியாக மேயர் நாற்காலியில் அமர்ந்ததால், கட்சியின் சீனியர்கள் யாரையும் அவர் மதிப்பது இல்லை, மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்பது இல்லை’ எனப் புகார்கள் கிளம்பின.

“கமிஷன் விவகாரத்தில் துணைமேயர் தர்மலிங்கத்துக்கும் மேயருக்கும் பிரச்னை. நாடாளுமன்றத் தேர்தலின்போது, பி.ஜே.பி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துடன் தர்மலிங்கம் நெருக்கம் காட்டியதாகப் புகார் அனுப்பினார் கார்த்தியாயினி. அதனால், தர்மலிங்கத்தின் துணைமேயர் பதவி காலியானது. பெங்களூரு சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்ட சமயத்தில், தீர்ப்புக் கொடுத்த நீதிபதி குன்ஹாவைக் கண்டித்து மாநகராட்சியில் தீர்மானமே நிறைவேற்றினார். அதற்காக கோர்ட் அவமதிப்பு வழக்குப் பாய, பயந்துபோய் மன்னிப்புக் கேட்டார் கார்த்தியாயினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்