மாமூல் முதல் கோல்மால் வரை... களமிறங்கிய வேட்பாளர்கள்!

பூசல்ஓவியம்: கண்ணா

தில்லுமுல்லு, கோல்மால், கட்டப் பஞ்சாயத்து, குற்றப்பின்னணி... இப்படி ஏதாவது ஒரு மைனஸ் இருப்பதுதான் வேட்பாளர் ஆவதற்கான தகுதி என்று ஆகிவிட்டது. சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல, இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அந்தத் தகுதிகள் கவனமாகப் பார்க்கப்படுகின்றன. ஆங்காங்கே எதிர்ப்புகளும் வலுக்கின்றன. ‘‘காசு வாங்கிவிட்டு பலரை வேட்பாளர்கள் ஆக்கிவிட்டார்கள் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும். மருத்துவமனையில் அம்மா இருப்பதால் அவருக்குத் தெரியாமலே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்​கிறது’’ என முண்டாசு கட்டுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அது பற்றிய அலசல் ரிப்போர்ட் இது.

திருச்சி

சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் டாக்டர் தமிழரசி. ‘போலி மருத்துவர்’ என்ற சர்ச்சையால் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு மாற்றப்பட்டார். ‘தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவரை நிறுத்தி விட்டீர்களே’ என அங்கேயும் புலம்பல் வர, அங்கிருந்தும் தமிழரசியைத் தூக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட தமிழரசிக்குத்தான் திருச்சி 1-வது வார்டில் சீட் தரப்பட்டிருக்கிறது. ‘‘என் மீதான சர்ச்சைகள் உண்மையில்லை எனத் தெரிந்துகொண்டதால்தான் அம்மா வாய்ப்பு தந்திருக்கிறார்’’ என சொல்லி வருகிறார் தமிழரசி. எம்.எல்.ஏ சீட் மிஸ் ஆனதால், இந்தமுறை எப்படியும் ஜெயித்து மேயர் ஆகிவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார் தமிழரசி.

திருச்சி மாநகராட்சி 8-வது வார்டில் போட்டியிடும் மாவட்ட ஜெ பேரவைத் தலைவரும் கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது தந்தைக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக, ஒருவருடைய கிட்னியைப் பெற்ற சர்ச்சையில் சிக்கியவர். மீண்டும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. தன் இடத்தை அபகரித்துக் கொண்டதாக கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக சக்திவேல் என்பவர் கொடுத்தப் புகார், பரபரப்பை கிளப்பியிருக்​கிறது.

‘‘அமைச்சர் வளர்மதியின் சொந்த வார்டான உறையூர் 58-ல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஸ்கரன், ஈஸ்வரனின் கொங்கு கவுண்டர்கள் பேரவையில் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக இருந்தவர். சில வருடங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க-வில் இணைந்தார். அதன்பிறகு கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்தவர், கடந்த தேர்தலில் கொங்கு வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்றினார். அப்படிப்பட்டவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேட்பாளரா அறிவிச்சிட்டாங்களே’’ எனப் புலம்பிய அதிருப்தியாளர்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்