அப்போலோ அப்டேட்ஸ்! - அன்று எம்.ஜி.ஆர். இன்று ஜெயலலிதா!

அலசல்

05.10.1984-ல் அப்போலோ...

ண்ணா சாலையிலிருந்து பிரியும் கிரீம்ஸ் ரோட்டிலிருந்து இடதுபுறம் திரும்பும் குறுகலான தெருவின் முனையிலிருக்கிறது அப்போலோ. மருத்துவமனையில் V.V.I.P. பேஷன்ட் இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் தெருமுனையிலேயே தெரிகிறது. அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் யூனிஃபார்மிலும் மஃப்டியிலும் காவல் துறையினர். இந்த மாதம் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் மூச்சுவிட சற்று சிரமப்பட்டார். எந்த மருத்துவமனைக்குச் செல்லலாம் என்பது தீர்மானிக்கப்​பட்ட பின், ‘இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் முதல்வர் அட்மிட் ஆக வருவார்’ என்று அப்போலோ மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்​பட்டது. அங்கு வி.ஐ.பி-களுக்காக, 16 ‘சூப்பர் டீலக்ஸ்’ அறைகள் உள்ளன. மருத்துவமனையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ ரூம் ஒவ்வொன்றும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைக்குச் சமம்.

முதல்வர் அனுமதிக்கப்பட்டதும், தினமும் அப்போலோ சென்றோம். மருத்துவமனைக்குள் நுழைந்ததும் வராண்டாவில் ‘வயர்லெஸ்’ஸுடன் சுற்றிக் கொண்டிருந்தார் சாதாரண உடையிலிருந்த ஒரு போலீஸ்காரர். வரவேற்பு கூடத்தில், ரிஸப்ஷனிஸ்ட் அருகில், ரெஸ்டாரெண்டில், அலுவலக அறைக்கு வெளியே, எக்ஸ்ரே அறை ஹாலில், கார் பார்க்கிங் பக்கத்தில், லிஃப்டில் என்று எல்லா இடங்களிலும் காவல் துறையினர் கண்ணில்பட்டார்கள். மருத்துவ​மனையில் தனியாக அதிக நேரம் நின்றால், பின்னால் வந்து நம்மைத் தொட்டுக் கூப்பிடுகிறார்கள். ‘‘என்ன விஷயம் யாரை பார்க்கணும்?” என்று விசாரிக்கிறார்கள்.

முதல் இரண்டு நாட்கள் யாருமே முதல்வரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. 8-ம் தேதியன்று காலையில் முதல்வரைப் பார்க்க அனுமதிக்கப்​பட்டவர்கள் தலைமைச் செயலர், நாவலர், டாக்டர் ஹண்டே. நிருபர்களும் ஆர்வ மிகுதியால் பலவிதமாய் கேள்வி கேட்டு டாக்டர் ரெட்டியை துளைத்தெடுத்துக் கொண்​டிருந்தார்கள். தினமும் முதல்வர் ‘சியர்ஃபுல்’லாக இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டபோது, சில பத்திரிகை நிருபர்கள் ‘‘தினமும் சியர்ஃபுல்லாக இருந்தால் இங்கே எதற்கு இருப்பதாம்?” என்று கேட்டது மனதை நெருடத்தான் செய்தது.

முதல்வருக்கு ‘டயாலிஸிஸ்’ செய்ததைப் பத்திரிகைகள் தங்களுக்கு ஏற்றபடி யூகித்து எழுதிக்​கொள்வதாக வருத்தப்பட்டார் டாக்டர் ரெட்டி. அப்போலோவில் முதல்வருக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைத்தாலும் சென்னைப் பொது மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படுவார் என்று அடிக்கடி பேசிக் கொள்ளப்பட்டது. சென்னைப் பொது மருத்துவமனையில், 42-ம் நம்பர் வி.ஐ.பி. வார்டில் முதல்வருக்காக ஸ்பெஷலாக அறை ஒன்று தயார் செய்யப்பட்டது. பொது மருத்துவமனையில் முதல்வர் தங்கினால் மற்ற நோயாளிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டதாம்.

அதற்குக் காரணம், வெளியே கிளப்பி விடப்படுகிற வதந்திகள். இந்த வதந்திகளுக்குக் காரணம் பத்திரிகை​காரர்களும், தி.மு.க-வினரும்தான் என்பது ஆளும் கட்சி வி.ஐ.பி-க்களின் கருத்து. ‘‘முதல்​வருக்காக இப்போது நியமிக்கப்பட்டுள்ள ஐந்து அமைச்சர்கள் கொண்ட உட்குழுவுக்கும், மருத்துவ நிபுணர் குழுவுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு​தான் வதந்திகள் பரவுவதற்கு அஸ்திவாரம்’’ என்றும் சொன்னார் எப்போதும் மருத்துவமனையிலேயே இருக்கும் வி.ஐ.பி.

மருத்துவமனையில் நடக்கிற நிகழ்ச்சிகள் சில அந்த அதிகாரியின் கூற்றை உறுதி செய்தது. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அக்டோபர் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு. அன்றிலிருந்து அக்டோபர் மாதம் 14-ந் தேதி வரை முதல்வரின் உடல்நிலை குறித்து நிருபர்களுக்குத் தகவல் கொடுத்துக் கொண்டிருந்தவர் அப்போ​லோவின் தலைமை மருத்துவர் டாக்டர் ரெட்டி.

அக்டோபர் 14-ம் தேதி இரவு மூளையில் ஏற்பட்ட ஒரு கட்டியினால் முதல்வர் உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. இந்தச் செய்தி 15-ந் தேதி வெளிவந்தவுடன், முதல்வரின் உடல்நிலையைப் பற்றி அவ்வப்போது நிருபர்களுக்கு விளக்கும் பொறுப்பு ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் குழுவின் சார்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஹண்டே மருத்துவ அறிக்கையை ஒவ்வொரு முறையும் படித்தார். ஆனால், அந்த அறிக்கையைக்கூட முழுமையா சுதந்திரமாகவும் படிக்கவிடாமல் அவர் அருகிலேயே இருக்கும் அமைச்சர் ஆர்.எம்.வீ., ஹண்டேயை விரட்டிக்கொண்டிருந்தார். ‘‘அதெல்லாம் சொல்லணுமா என்ன?” என்று தடுத்தார் அவர்.

‘‘முதலமைச்சருக்கு நீரிழிவு, சிறுநீரகம் செயல்​படாமை மற்றும் பக்கவாத நோய் ஆகிய மூன்று கடுமையான நோய்களும் ஒன்றாக இணைந்து தொல்லையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன. அப்போலோ மருத்துவமனையின் சிறந்த சிகிச்சை அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிட்டது” என்ற அமெரிக்க டாக்டர்கள் அறிக்கை தொண்டர்களை அதிக வேதனைக்குள்ளாக்கியது.

ஒரு நாள் இரவு மருத்துவமனையில் தங்கும் நிருபர்களை வெளியேற்றிவிட்டனர் போலீஸார். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், ‘மற்ற நோயாளிகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது’ என்பது​தான். ஆனால், ‘‘அப்போலோவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் புரளி கிளம்பியதால்தான் வெளியேற்றினோம்” என்றார் மருத்துவமனை அதிகாரி.

‘‘நிருபர்களை மட்டும் வெளியேற்றினால் போதுமா... முதல்வரே இங்குதானே இருக்கிறார்?” என்றதற்கு பதில் சொல்லாமல் நழுவினார் அதிகாரி.

ஒவ்வொரு வேளையும் சட்டத் திட்டங்களை மாற்றிக் கொண்டே போகும் போலீஸாரின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கொடுக் கின்றன. மக்களிடையே வதந்திகள் பரவ இதுவும் காரணமாயிற்று.

வெளியே வந்தால் சோகம் வழியும் நூற்றுக்​கணக்கான முகங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்​கின்றன. நம் கையைப் பிடித்துக் கொண்டு பரபரப்​பாக, ‘‘என் தலைவனுக்கு என்னங்க ஆச்சு... உள்ளதைச் சொல்லுங்க ஐயா!” என்று எம்.ஜி.ஆரை இதயத்தில் வைத்துப் பூஜிக்கும் இந்த ஏழைத் தொண்டர்கள் கெஞ்சுவது நம்மை நெகிழ வைக்கிறது.

(ஜூ.வி. இதழில் அப்போது வெளியான கட்டுரையின் ஒரு பகுதி இது.)

இன்று அப்போலோவில் ஜெயலலிதா...

அப்போலோவுக்கு ஒரு ராசி உண்டு. அரசியல் வி.வி.ஐ.பி-கள் பலரும் அவ்வப்போது அட்மிட் ஆவார்கள். ஆனால், மருத்துவ முறையில் ஏதாவது விமர்சனம் வைத்துவிட்டுப் போவார்கள். இப்படித்தான்.. முரசொலி மாறன், ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் தரப்பில் பிரச்னை முன்வைக்கப்பட்டது. அதை சரிசெய்ய அப்போலோ உரிமையாளர் பிரதாப் ரெட்டி தன்நிலை விளக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பார். ஆஸ்பத்திரியை மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து போலீஸ் கஸ்டடி எடுத்துக்கொள்ளும். அதனால், ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் விசிட்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள்... என்று சகல தரப்பினரும் சங்கடப்படுவார்கள். இது கடந்த காலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்