மிஸ்டர் கழுகு : அப்போலோ நிமிடங்கள்! - மன்னார்குடி மருத்துவர்கள்

‘‘அப்போலோவில் முதலமைச்சர் ஜெயலலிதா அட்மிட் ஆகி ஒரு வாரத்துக்கு மேல் ஓடிவிட்டது. அரசாங்கம், அப்போலோ நிர்வாகம், ஜெயலலிதாவைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. முதல்வர் எப்போது மருத்துவ மனையைவிட்டு வருவார் என்பது இன்றுவரை முடிவாகவில்லை’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகார், குறிப்பு நோட்டில் ஆழ்ந்தார்.

‘‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி மத்திய அரசு அறிக்கை வாங்கியதாமே?’’

‘‘மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டு​தான் இருக்கின்றனர். ஆனால், அந்த அறிக்கைகள் மத்திய ஆட்சியாளர்களுக்குத் திருப்தி தரவில்லை. அந்த அறிக்கைகளில் கூடுதல் விவரங்கள் என எதுவுமில்லை. ‘அமைச்சர்​களுக்கே அப்போலோவில் 144 தடை. யாரும் ஜெயலலிதாவை போய்ப்  நேரடியாக பார்க்கவே முடிய​வில்லையே? பிறகு, எப்படி உண்மை​யான அறிக்கையை கொடுக்க முடியும்?’ என இங்குள்ள, அதிகாரிகள் சொன்னார்கள். இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தையே தொடர்பு கொண்டுப் பேசி, அறிக்கை கேட்டார்களாம்”

‘‘கொடுத்தார்களா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்