கல்லா கட்டிய மேயர்கள்... கல்தா பின்னணி!

சரிவு

அ.தி.மு.க-வின் சிட்டிங் மேயர்கள் எட்டுப் பேருக்கு இந்த முறை சீட் தரப்படவில்லை. கமிஷன், முறைகேடு, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, உள்கட்சி வெட்டுக்குத்து என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது பற்றி பின்னணித் தகவல்கள்....

குப்பைகளை ஒளித்துவைத்தவர்!

ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்துவதால் நல்ல இமேஜுடன் வலம்வந்த சூழலில், சென்னை மேயராக வெற்றிபெற்ற சைதை துரைசாமி மீது ஏகத்துக்கும் மக்களிடம் எதிர்பார்ப்பு. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதிகள்தோறும் குப்பைகளை ஒளித்துவைக்க நீலநிற தடுப்புகள் அமைத்து, சென்னையை நாறடித்தது மட்டுமே இவரது சாதனை (!). 2016 சட்டமன்றத் தேர்தலில், சென்னையில் உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்திலும் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி. இதற்கு சைதையின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என மேலிடத்துக்கு ரிப்போர்ட் போனது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என பல விவகாரங்களால் சைதை துரைசாமி கைகழுவப்பட்டார்.

வாய் பிளக்கவைத்த மேயர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்