அம்மா உணவகத்திலும் கொள்ளை!

நெல்லை மாநகராட்சி அட்ராசிட்டி

2011-ல் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் நாற்காலியில் அமர்ந்த அ.தி.மு.க-வின் விஜிலா சத்யானந்த், 2014-ல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனதைத்  தொடர்ந்து  நடைபெற்ற  இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் புவனேஸ்வரி மேயர் பதவிக்கு வந்தார். “இந்தப் பொறுப்பு அம்மா என் மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்தது. அதனால் அம்மாவின் பெயருக்கு எந்தவிதக் களங்கமும் ஏற்படாத வகையில் செயல்படுவேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாத மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவேன்” என்று மேயராகப் பொறுப்பேற்றபோது புவனேஸ்வரி உறுதி அளித்தார். அதில், அவர் கடைசிவரை உறுதியோடு இருந்தாரா?

பவர் பாலிட்டிக்ஸ்!

“மேயர் புவனேஸ்வரிக்கும், துணைமேயர் கணேசனுக்கும் இடையே பவர் பாலிட்டிக்ஸ். கணேசன், பொறுப்பு மேயராக இருந்தபோது சாலைப் பணிகளுக்காக ரூ.40 கோடி அனுமதி வழங்கி இருந்தார். அந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி, புவனேஸ்வரி மேயரானதும் பணிகளை நிறுத்தினார். இந்த விவகாரம் அமைச்சர் ஓ.பி.எஸ் வரை கொண்டுசெல்லப்பட்டது. அதன் பிறகுதான், அந்தப் பணிகளை புவனேஸ்வரி அனுமதித்தார். ஆனாலும், இந்த மோதல் தொடர்கிறது. இருவருமே பிறரைத் தூண்டிவிட்டு வழக்குகளைப் போட வைத்து அசிங்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மக்களை மறந்த மேயர்!

தாமிரபரணி ஆற்றில் மாநகராட்சிக் கழிவுகள் கலக்கப்படுகின்றன. பெரிய வர்த்தக நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம் போன்றவற்றின்  எண்ணெய் கழிவுகளும் நேரடியாகக் கலக்கின்றன. அவற்றைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கொக்கிரக்குளம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீருக்கு அல்லாடும் அவலம் இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க மாநகராட்சி மேயரோ, அதிகாரிகளோ ஆர்வம் காட்டவில்லை” என்று நொந்துகொண்டனர் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்