பறந்த செலவு ரூ.9.42 கோடி தேர்தலுக்கு ரூ.64.72 கோடி - அ.தி.மு.க வரவு செலவு!

அம்பலம்இன்ஃபோகிராஃபிக்ஸ்: ஆரிப் முகம்மது

ள்ளாட்சித் தேர்தல் களை கட்டத் தொடங்கிவிட்டது. கரன்சிகள் ஏகத்துக்கும் கொட்டப்படும். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிகள் கொட்டிய கரன்சிகள் கணக்கில் அடங்காது. கணக்கு காட்டியதே மயக்கம் போடும் அளவுக்கு இருக்கிறது. வேட்பாளர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் செலவுகள் தொகுதிக்குட்பட்டது. அதற்கு வரம்பு உண்டு. ஆனால் கட்சிகளின் தலைமை செய்யும் செலவுகளுக்கு வரம்பு இல்லை. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. செய்த செலவுகள் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட் இது. 

கதீட்ரல் ரோடு பாங்க் ஆஃப் இந்தியா, அபிராமபுரம் இந்தியன் பேங்க், மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கிகளில் அ.தி.மு.க-வுக்கு 5 அக்கவுன்ட்கள் இருக்கின்றன. சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு கையிருப்பை வங்கியிருப்பு சேர்த்து அ.தி.மு.க-விடம் இருந்த மொத்த பணம் ரூ.217.86 கோடி. தேர்தலுக்கு செலவழித்த பிறகு இது ரூ.197.69 கோடியாக குறைந்தது. 

ஸ்டார் பேச்சாளர்கள் 25 பேரின் போக்குவரத்து செலவு​களை அ.தி.மு.க. செய்தது. அதில் நடிகர் சிங்கமுத்துவுக்கு​தான் மிக குறைந்த தொகையாக 56 ஆயிரம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது. மிக அதிகபட்சமாக நடிகை விந்தியாவுக்கு ரூ.1.14 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் வையாபுரி, ஆனந்த்ராஜ், ஆர்த்தி, மனோபாலா, தியாகு, செந்தில், ராமராஜன் ஆகியோரைவிட குண்டுக் கல்யாணத்துக்குதான் கூடுதல் தொகை தரப்பட்டிருக்கிறது. நாஞ்சில் சம்பத்திற்கு செந்தில், ராமராஜன், குண்டுக் கல்யாணம், விந்தியா ஆகியோரைவிட குறைவாகத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டார் பேச்சாளர்களின் போக்குவரத்துக்கு மட்டும் ஆன செலவு 20.27 லட்சம் ரூபாய்.

தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு ஆகாய மார்க்கமாக சென்றுதான் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். Heligo Charters என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலி​காப்டரை​தான் பயன்படுத்தினார். இதற்காக 5.66 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டன. Chipsan Aviation என்ற நிறுவனத்தின் விமானத்தையும் ஜெயலலிதா பயன்படுத்தினார். அதற்கான செலவு 3.76 கோடி ரூபாய். ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணச் செலவு மட்டும் 9.42 கோடி ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்