மேயரா... மைனரா? சேலம் அலங்கோலம்!

ஊழல்

ங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சேலம் நகராட்சிக்கு ராஜாஜி தலைவராகவும் விஜயராகவாச் சாரியார், நடேச பண்டாரம் போன்ற தேசிய தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்களாகவும் இருந்த பெருமை உண்டு. 1994-ல் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த மாநகராட்சியின் மேயராக அ.தி.மு.க-வின் சவுண்டப்பன் இருந்து வருகிறார்.

சவுண்டப்பன் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். நாடக நடிகர். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார். அ.தி.மு.க பிளவு பட்டபோது ஜெ., அணியில் இருந்தவர். இரண்டு முறை கவுன்சிலர் ஆக இருந்திருக்கிறார். 2001 - 2006 வரை துணைமேயராக இருந்தார். அப்போது மேயராக இருந்த சுரேஷ்குமார் எம்.பி ஆனதால், இவர் பொறுப்பு மேயராக இருந்தார். பொறுப்பு மேயராக ஆட்சிக்கு விசுவாசமாக நடந்துகொண்ட தால், கடந்த முறை மேயர் பதவி இவரைத் தேடி வந்தது. ஆனால், இவர் சேலம் மக்களின் நலன் காக்கும் மாநகர தந்தையாக இல்லை என்கிறார்கள். நாடக நடிகரான இவர் சேலம் மாநகராட்சி மக்களின் நலனுக்கு எதிரான வில்லன் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்