ஏன் வந்தார் ரிச்சர்ட் பியெல்?

மர்மம்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மர்மம் நீடித்துவருகிறது. இந்த நிலையில், லண்டன் மருத்துவக் குழு சென்னை வந்து சென்றுள்ளது... என்ன நடந்தது... என்ன நடக்கிறது? ஒரு ரிலே ரிப்போர்ட்!

செப்டம்பர் 22

இரவு 10:30 மணி அளவில், உடல்நிலை சரியில்லாமல் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விடிய விடிய அப்போலோ மருத்துவமனையின் நுழைவு வாயிலை சிறிது சிறிதாக  அ.தி.மு.க-வினரும், பொதுமக்களும் ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார்கள். யாரும் முதல்வரைப் பார்க்க அனுமதிக்கப்படாத நிலையில் மருத்துவக் குழுவினர் தவிர சசிகலா, இளவரசி, அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முதல்வருக்கு மிக மிக நெருங்கியவர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். அமைச்சர்கள் தொடங்கி கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரை, ‘முதல்வருக்கு என்ன ஆச்சு?’  என்ற கேள்வியை அதிர்ச்சியோடு எதிரொலித்தார்கள்.

செப்டம்பர் 23

முதல்வரின் உடல்நிலை பற்றி மக்களுக்குப் பதில் சொல்லி ஆகவேண்டிய நிலையில்,   அப்போலோவின் முதல் அறிக்கை 23-ம் தேதி வெளியிடப்பட்டது. “காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக நேற்று இரவு முதல்வர் அனுமதிக்கப்பட்டார். இன்று காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவர் சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்கிறார். அவர் உடல்நிலையை மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது.

இதனிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல கட்சிகளின் தலைவர்களும் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று அறிக்கைகள் வெளியிட்டனர்.  “அம்மாவுக்கு வெறும் காய்ச்சல்தான். எதிர்ப்புசக்தி குறைவு, சளிப் பிடித்திருக்கிறது, ரெஸ்ட் எடுக்கிறார். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்’’ என்று அ.தி.மு.க நிர்வாகிகள் கூறிவந்தனர்.   

செப்டம்பர் 24

இன்னொரு செய்தி அறிக்கையை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டது, அதில், “ஜெயலலிதா சாதாரணமாக உணவுகளை எடுத்துக்கொள்கிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” என்று சொல்லப்பட்டது. உடல்நலம் தேறி வருகிறார், முன்னேற்றம் இருக்கிறது என்று அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடாத நிலையில், முதல்வருக்கு வெறும் காய்ச்சல் தானா என்கிற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. மேலும், முதல்வர் அடுத்தக் கட்ட சிகிச்சைக்காக அப்போலோவில் இருந்து சிங்கப்பூர் அனுப்பப்படலாம் என்கிற தகவலும் வெளியானது.

செப்டம்பர் 25

வெறும் காய்ச்சலுக்கா இவ்வளவு காபந்து... என்கிற கேள்வி எழுந்த நிலையில், மற்றொரு அறிக்கையை அப்போலோ வெளியிட்டது. அதில், “22-ம் தேதி நள்ளிரவு சேர்க்கப்பட்ட முதல்வருக்கு சிகிச்சைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும் விதத்தில் மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் மீண்டும் ஏற்படாமல் இருக்க, அவருக்குத் தொடர்ந்து மருந்துகள் தரப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்தும்,  மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்றும் தவறான தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. அவர் உடல்நிலை சீராக இருக்கும் நிலையில், இதுபோன்ற தவறான, ஆதாரமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம். அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு மீண்டும் தன் பொறுப்புகளுக்குத் திரும்புவார்” என்று இருந்தது.

செப்டம்பர் 29

மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில்தான், அந்த மற்றொரு தகவலும் வந்தது. முதல்வரின் உடல்நிலை சீரியஸ் என்பதுதான் அது. 29-ம் தேதி நள்ளிரவு வரை அப்போலோ வாசலில் முதல்வரின் உடல்நிலை குறித்த கவலையுடன் தொண்டர்கள் காத்திருந்தனர். அன்று காலை முதலே தம்பிதுரை உடனிருக்கிறார். பன்னீர்செல்வம் முதல்வரை பார்க்கச் சென்று மீண்டும் திரும்பவே  இல்லை. போலீஸ் கமிஷனரும் உடனிருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் வந்தபடி இருந்தன. போனவர்கள் திரும்பவில்லையே என்று தொண்டர்கள் கவலையுடன் காத்திருந்த நிலையில்தான், ஜெயலலிதாவை விட்டுத் துளியும் நகராத சசிகலாவும், இளவரசியும் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்கள். அடுத்ததாக மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த வளர்மதியும், தம்பிதுரையும் முதல்வர் நலமாக இருப்பதாகத் தொண்டர்களிடம் கூறிவிட்டு கடந்தார்கள். அன்றைய தினம் அப்போலோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

செப்டம்பர் 30

அப்போலோவின் அடுத்த அறிக்கை வெளியானது. “முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டு தன் பணிகளுக்குத் திரும்புவார்” என்றது அந்த அறிக்கை. ஆனால், அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா என்பது போன்ற தொண்டர்களின் கேள்விகளுக்கு அதில் பதில் கிடைத்தபாடில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்