மிஸ்டர் கழுகு : கவர்னரை தடுத்த காரணம் என்ன?

சீரியஸான மூடில் இருந்த கழுகார், கவர்னர் அறிக்கையை செல்போன் திரையில் ஜூம் பண்ணிப் படித்துக்​கொண்டிருந்தார். ‘‘அதில் என்ன ஆராய்ச்சி?’’ என்றோம்.

‘‘கவர்னரின் வருகையிலும், அதையொட்டி கவர்னர் மாளிகை சார்பில் வெளியான அறிக்கையிலும், ‘கேள்விகள் ஆயிரம்’ இருக்கின்றன. கவர்னர் அறிக்கையில், எந்த இடத்திலும், ‘கவர்னர் முதலமைச்சரை நேரில் சந்தித்தார்; முதலமைச்சரிடம் அவரது உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தார்; விரைவில் முதலமைச்சர் குணமடைய வாழ்த்து சொன்னார்’ என்று குறிப்பிடப்படவே இல்லை. மாறாக, ‘கவர்னர் மருத்துவமனைக்குச் சென்றார். முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களைச் சந்தித்து விவரங்களைக் கேட்டார்; முதலமைச்சர் சிகிச்சை பெறும் வார்டுக்கு கவர்னரை டாக்டர்கள் அழைத்துச் சென்றனர்’ என்றுதான் இருக்கிறது. இந்தக் காரணங்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி ஏற்கெனவே உலவிக்கொண்டிருக்கும் வதந்திகளை இன்னும் பலமடங்காக அதிகரிக்க வைத்துள்ளன.’’

‘‘கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்த​போது என்னதான் நடந்ததாம்?”

‘‘அக்டோபர் 1-ம் தேதி இரவு சரியாக 7 மணிக்கு அப்போலோ வந்த கவர்னர், அப்போலோ சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி அறையில் 6 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு, பிரதாப் ரெட்டியும் கவர்னரும் லிஃப்ட் மூலம் இரண்டாவது தளத்துக்குச் சென்றனர். அங்கே இருந்த அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் முதலமைச்சரின் உடல்நிலை பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, ‘முதலமைச்சரைப் பார்க்க முடியுமா?’ என்று கவர்னர் கேட்​டதற்கு, ‘நோய்த் தொற்று தீவிரமாக உள்ளது. அதனால், இப்போது பார்ப்பது, முதலமைச்​சருக்கும் நல்லதல்ல; உங்கள் ஆரோக்கியத்​துக்கும் நல்லதல்ல’ என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், அந்த வார்டுக்குள் போகவேண்டு​மானால், கவர்னர் தன்னுடைய ஷூக்களை கழற்றிவிட்டு, முகத்திலும் தலையிலும் பாதுகாப்பு உறை அணியவேண்டும் என்பது உள்ளிட்ட நடைமுறைகளை டாக்டர்கள் விளக்கி உள்ளனர். ‘அப்படியானால், முதலமைச்சரை தொந்தரவு செய்யவேண்டாம்’ என்று சொன்ன கவர்னர், அத்துடன் திரும்பிவிட்டார். டாக்டர்களுடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மொத்தமே 4 நிமிடங்கள்தான். மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தபோது, கவர்னரின் உதவியாளர் கையில், புதிதாக ஒரு ஃபைல் இருந்தது என்பது மிக மிக முக்கியமான விஷயம். அதன்பிறகு, சரியாக 7.17 மணிக்கு, அப்போலோ மருத்துவமனையில் இருந்து கவர்னரின் கார் கிளம்பிவிட்டது. அடுத்த சில நிமிடங்களில், கவர்னர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கையில், ‘முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்’ என  பதிவு செய்யப்பட்டு இருந்தது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்