“அம்மா அதைத் தாண்டி விடுவார்!”

முதல்வர்

நுரையீரல், ஸெப்ஸிஸ், பாக்டீரியா, வென்டிலேட்டர், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் என அப்போலோவை சுற்றி பேசப்படும் பேச்சுகள் ரத்தத்தின் ரத்தங்களின் பல்ஸை எகிற வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்போலோவை சுற்றியே செய்திகள் வட்டமடிக்கின்றன. கடந்த ஐந்து நாட்களாக நடந்த அப்போலோ அப்டேட்ஸ் இங்கே!

அம்மன்லோ!

அம்மா நலம் பெற வேண்டும் என்பதற்காக தினமும் சூடம், ஆரத்தி, அர்ச்சனை என வழிபாடு நடத்துவது பூசணிக்காய்  உடைப்பது என கட்சியினர் தொடர்ந்து ஈடுபடுவதால் அம்மன் கோவில் வாசலானது அப்போலோ. சடைப்பிடித்த தலைமுடி, கழுத்தில் ருத்திராட்சத மாலையோடு வந்த ஒரு பெண், திடீரென சாமி ஆடினார். “நான்தான் ஆயிரம் கண்ணுடைய சமயபுரம் மாரியம்மன். அம்மாவுக்கு ஒண்ணும் இல்லை. ஏழரை சனியால்தான் அம்மாவுக்குப் பிரச்னை. வரும் வெள்ளிக்கிழமை அமாவாசை அன்று அம்மாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. அதை அம்மா தாண்டி விடுவார். ஆயிரம் பேரை சமயபுரம் மாரியம்மனுக்கு முடி காணிக்கை கொடுக்க சொல்லுங்கள். எல்லாம் சரியாகிவிடும்” என சொல்லி மருத்துவமனை வளாகத்தைப் பரபரப்பாக்கினார். 

பாஸ்... பாஸ்!

நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் உறவினர்​களுக்கு பாஸ் வழங்குகிறது அப்போலோ. விசிட்டர்ஸ் பாஸ் இருந்தால் அப்போலோ வளாகத்துக்குள் சென்றுவிடலாம் என்பதால் நோயாளிகளை பார்த்துவிட்டு வருபவர்களிடம் “சார்... பாஸ் இருக்கிறதா?” என கெஞ்சாத குறையாகக் கேட்டு வருகிறார்கள் கட்சியினர். பாஸ் வாங்கி கரைவேட்டி​யோடு உள்ளே செல்ல முயன்ற அ.தி.மு.க-வினர் சிலரை தடுத்தி நிறுத்திய போலீஸார் பாஸை சோதனையிட்டபோது, அது போலி என தெரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்