மாணவர்களின் மன்மத கலாட்டா!

டூர் அவமானம்... வாட்ஸ்அப் வைரல்... கூலிப்படை மாணவி...அறியாமை 

யில் நிலையம் ... கத்தி.... என்றாலே சமீபகாலமாக நம் கண்முன் வந்து போகிறார் சுவாதி. கடந்த 2-ம் தேதியும் அப்படி ஒரு தகவல் வர, சென்னை சிட்டி போலீஸ் ஆடிப்போய்விட்டது. காதல் சம்பந்தப்பட்ட தகறாரால் நிகழ்ந்தது கத்திக்குத்து. அதேபோன்று, ரயில் நிலையத்தில்வைத்தே நடந்திருக்கிறது. பதறாமல் என்ன செய்ய?

கோட்டூர்புரம் ரயில் நிலைய எல்லையில் நடந்த இந்தச் சம்பவத்தை அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரமிருக்கிற எழும்பூர் ரயில்வே போலீஸ் விசாரிக்கிறது. கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட மாணவன் மைக்கேல் முர்ரேயின் உடல்நிலையைப் பார்த்த பின்னர், மேற்கொண்டு விசாரிப்போம் என்ற எண்ணத்துடன் அரசு ராயப்பேட்டை மருத்துவ மனைக்குச் சென்றோம். அங்கு, மைக்கேல் முர்ரேயின் உறவினர்கள், ‘‘சிகிச்சை முடிந்து அவரை வீட்டுக்குக் கொண்டுபோய்விட்டோம். பிரச்னை ஒன்றுமில்லை. எல்லாம் சரியாகிவிட்டது’’ என்றனர்.

சென்னை அடையாறு பகுதியில்தான் மைக்கேல் முர்ரே படிக்கும் அந்தத் தனியார் கல்லூரி உள்ளது. ‘மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ் படிப்புக்கு இந்தக் கல்லூரி பிரபலம்’ என்ற தகவலோடு கல்லூரி ஏரியாவில் இருந்தே விசாரணையைத் தொடங்கினோம். சில மாணவர்கள் நம்மிடம் பேச முன்வந்தனர். “மைக்கேல் முர்ரே மார்டன் டைப். ரெண்டாவது வருஷம் படிச்சிட்டிருக்கான். முர்ரேக்கும், கூடப் படிக்கும் ரீனுவுக்கும் நட்பு உண்டு. அதை லவ்வுன்னும் சொல்ல முடியாது, அப்படி இல்லேன்னும் சொல்ல முடியாது. ஆனா, ரீனுவுக்கு முன்னாடியே முர்ரேகிட்டே ப்ரீத்திங்கிற மாணவிதான் நல்ல நட்புல இருந்தாங்க. ப்ரீத்திக்கு வேற யாரோடவோ தொடர்பு இருக்கறதா முர்ரேக்குத் தகவல் கிடைச்சதால ப்ரீத்தியை விட்டுப் பிரிஞ்சுட்டான். ப்ரீத்தியோட தொடர்புல இருக்கிறவங்க யாருன்னு முர்ரே, கலெக்ட் பண்ண ஆரம்பிச்சான். ரீனுவும், முர்ரேவும் தயார்பண்ணிய அந்த கலெக்‌ஷன்ஸ் (!?) மொத்தமும் வாட்ஸ் அப் மூலமா காலேஜ்ல சுத்த ஆரம்பிச்சுடுச்சு. அப்புறம்தான் ப்ரீத்தி, முர்ரேயை ‘முடிக்க’ ஆள் ‘செட்’ பண்ற வேலையில் இறங்கியிருக்காங்க.”

“என்னது, ஆள் செட் பண்ணினாங்களா?” என்றபடி நடுக்கத்துடன் கேட்டோம்.

“20 நாட்களுக்கு முன்னால காலேஜ்ல சுற்றுலா ஏற்பாடு பண்ணினாங்க. டூர் போன இடத்துல சாப்பாடு சரியில்லைன்னு ப்ரீத்தி பெரிய கலாட்டா பண்ணினாங்க. ஏன்னா, சாப்பாடு தயார் பண்ற பொறுப்பு மைக்கேல் முர்ரேகிட்டே இருந்ததுதான். ப்ரீத்திக்கும், மைக்கேல் முர்ரேக்கும் இருக்கிற இந்த மோதல் காலேஜ்ல எல்லோருக்கும் தெரியும். முர்ரேகிட்டே சாப்பாட்டுப் பொறுப்பைக் கொடுத்தது மாதிரி, ப்ரீத்திகிட்டே ரூம் அலாட் பண்ற பொறுப்பு இருந்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ப்ரீத்தி கொஞ்சமும், மிஸ் பண்ணலை. முர்ரேவும், ரீனுவும் சந்திக்கவே முடியாத தூரத்தில ரூம் ஒதுக்கிட்டாங்க. முர்ரே தங்கியிருந்த அறைக்கு போனைப் போட்டு யாரோ அவனை நல்லா மிரட்டிட்டாங்க. டூர் பாயின்ட்லயே இவங்க இரண்டு பேருக்கும் சண்டை ஆகிடுச்சு. ‘சென்னைக்குப் போனதும் முதல்வேலையா ஏதாவது செய்தே ஆகணும். இல்லைன்னா, இந்த ப்ரீத்தி நம்மளை காலி பண்ணிடுவாங்க’னு முர்ரே எல்லோரிடமும் சொல்லிக்கிட்டே இருந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்