‘எக்மோ’ என்றால்..? அறிக்கைக்கு அசராத அப்போலோ...

புதிர்

ப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்​பட்டது முதல் அவருடைய உடல்​நிலை பற்றிய தகவல்களும், வதந்திகளும் வந்தபடி இருக்கின்றன. முதல்வரின் உடல்நிலை குறித்து அரசுத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படாத நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் அறிக்கைகள் மட்டுமே மக்களின் கேள்விகளுக்கான பதிலாக இருந்து வருகின்றன.

மருத்துவமனையின் முதல் அறிக்கை செப்டம்பர் 23-ம் தேதி வெளியானது. அதில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவுக்கு முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறப்பட்டது. அதுபோலவேதான், பிறகு வந்த அறிக்கைகளும் அமைந்தன. கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில்தான், நோய்த்​தொற்றுக்​​கான சிகிச்சைகளை எடுத்துக்​கொள்​கிறார் என்று சொல்லப்பட்டது. முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் தீவிரம் அடைந்த நிலையில், அக்டோபர் 3-ம் தேதி, அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்தான், நுண்கிருமிக் கொல்லி மருந்துகள் தரப்பட்டு​வருவதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்