மீண்டும் வருகிறார் ரிச்சர்ட்!

கதம்பம்

ப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு, போயஸ் கார்டன் இல்லம் முற்றிலும் முடங்கிவிட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த வீடு இப்போது வெறிச்சோடிக் கிடப்பதை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள். புதிதாகப் வேலையில் சேர்ந்த பணி யாளர்களை, ‘உங்கள் ஊருக்குப் போய்விடுங்கள்’ என்று சொல்லி விட்டார்களாம். சில பணியாளர்கள் மட்டும்தான் அங்கு பணியில் உள்ளனர்.

நாடே வியக்கும் வகையில், தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குத் திருமணம் நடத்தினார், ஜெயலலிதா. பின்னர், சுதாகரனை வளர்ப்பு மகன் இல்லை என்று ஜெ. அறிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஜெயலலி தாவும் சுதாகரனும் ஒரே இடத்தில் இருந்தபோதிலும், சுதாகரன் இருந்த திசையில் ஜெயலலிதா திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கு அப்போலோ வந்த சுதாகரன், கேட் டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்