காவிரி... கைவிரி!

ஒட்டுப் பொறுக்கும் அரசியல்... காங்கிரஸ் - பி.ஜே.பி. கூட்டணி...துரோகம்

``செப்டம்பர் 2-ம் தேதி ‘இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டும்’ என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.’’

காங்கிரஸும் பி.ஜே.பி-யும் கூட்டணி போட்ட கேலிக்கூத்து இது. கூட்டணி போட்டது தேர்தலில் அல்ல. தண்ணீரில். காவிரி விவாகரம் விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ பற்றிய பேச்சுகளும் எழும். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டதும் முட்டுக்கட்டை போட்டு விவசாயிகளின் வாழ்வைw கேள்விக் குறியாக்கிவிட்டது மத்திய அரசு.

தமிழகமும், கர்நாடகாவும் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ‘தமிழகத்துக்கு ஆண்டுக்கு 217 டி.எம்.சி. நீரை தரவேண்டும் என 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம், தனது இறுதி உத்தரவில் சொல்லியிருந்தது. ‘உத்தரவை செயல் படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும்’ என நடுவர் மன்றம் உத்தரவும் போட்டிருந்தது. இதை அப்போதே கடுமையாக எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் போட்டது. தமிழக அரசின் தொடர் வற்புறுத்தலைத் தொடர்ந்து நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை 2013-ம் ஆண்டுதான் அரசிதழிலில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

‘மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தி வந்த தமிழக அரசு, 18-3-2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. ‘மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தற்காலிக ஏற்பாடாக மத்திய நீர்வள ஆதார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில், மாநில தலைமைச் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, காவிரி மேற்பார்வை குழு ஒன்றை அமைக்க வேண்டும்’ என ஆணையிட்டது உச்ச நீதிமன்றம். 22-5-13 அன்று மேற்பார்வைக் குழுவும் அமைகக்ப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும் நடவடிக்கை எதையும் இந்தக் குழுவினால் எடுக்க முடியவில்லை. இதனால், தமிழக அரசு மீண்டு்ம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த மனு இன்று வரை கிடப்பில் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான், ‘இந்த ஆண்டு தமிழக விவசாயிகளின் சம்பா சாகுபடிக்கு காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும்’ என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம்.செப்டம்பர் 2-ம் தேதி, ‘இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டும்’ என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகு  கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. தமிழக பஸ்கள் கொளுத்தபட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதன்பிறகு, கர்நாடக அரசு தொடர்ந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், செப்டம்பர் 20-ம் தேதி மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ‘மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும்’ என காலவரம்பு விதித்தது. அதோடு, ‘விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும்’ எனச் சொன்னது. கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுத்ததோடு, சட்டமன்றத்தில் ‘தண்ணீர் திறந்துவிட முடியாது’ எனவும் தீர்மானம் நிறைவேற்றியது. ‘தண்ணீர் திறந்துவிடக் கூடாது’ என பி.ஜே.பி-யை சேர்ந்த எதிர்க் கட்சி தலைவர் தீர்மானம் கொண்டு வர, ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் அதை வழிமொழிந்தார். இப்படி, காவிரி விவகாரத்தில் கர்நாடகக் கட்சிகள் கைகோத்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்