உள்ளாட்சி தேர்தலுக்கு செக்... ஆளும் கட்சிக்கு பக்!

தீர்ப்பு

‘‘‘ஜனநாயகம் என்பது மத்தியில் அமர்ந்திருக்கும் 20 பேரால் கட்டமைக்கப்படுவது அல்ல. கிராமப் பஞ்சாயத்துக்களைக் கட்டமைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது’ என சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. அதன்படி நியாயமான முறையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு அது தவறிவிட்டது என தெரிகிறது” - இப்படி சொல்லித்தான் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்திருக்கிறார் நீதிபதி கிருபாகரன். அவருடைய தீர்ப்பில் உள்ள வார்த்தைகள் இடியாய் இறங்குகிறது.

ஐந்தாண்டு பதவி காலம் முடிவடைவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதியை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். அடுத்த நாளே வேட்புமனு தாக்கலும் தொடங்க... ‘அவசர அவசரமாக தேர்தலை ஏன் நடத்த வேண்டும்’ என சந்தேகத்தைப் எழுப்பினார்கள் எதிர்க் கட்சியினர். அதற்கு முன்பே நீதிமன்றத்தின் படியேறியிருந்தது தி.மு.க. ‘பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை’ என தி.மு.க, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்த வழக்கில்தான் தேர்தலுக்கு தடை விதித்தது நீதிமன்றம். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார். இதைவிட முக்கியமான விஷயம். ‘தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுவில் குற்றப்பின்னணி குறித்து முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கப்படுவதுடன், குற்றப்பின்னணி தகவல் தெரிவிக்க மறுத்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம். பஞ்சாயத்து அமைப்பு லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. கிராம மக்களின் சேவைக்காக கொண்டு வரப்பட்டது’ என சொல்லியிருக்கிறார் நீதிபதி கிருபாகரன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்