தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.!

விசாரணை வளையத்தில் இளைஞர்கள்

கேரளாவில் மையம் கொண்டு பெரும் பரபரப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய ஐ.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளும், அதுகுறித்த அச்சமும் இப்போது தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி இருக்கிறது.

அண்மையில், கேரள மாநிலம், காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்சென்ற சுமார் 20 பேர் அடுத்தடுத்து மாயமாகினர். எங்கே சென்றார்கள்... என்ன ஆனார்கள் எனத் தேடப்பட்டு வந்த நிலையில், மாயமானவர்கள் இருவரின் பெற்றோருக்கு வந்தது அந்த வாட்ஸ்அப் செய்தி.

‘நாங்கள் திரும்பிவரப் போவதில்லை. தெய்வீக ஆட்சி நடக்குமிடத்தில் உள்ளோம். முஸ்லிம்களை தாக்கும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட நாங்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துவிட்டோம்’ என வாட்ஸ் அப்பில் அவர்கள் தெரிவித்திருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பதறிப்போன பெற்றோர், கேரள அரசிடம் முறையிட, பற்றி எரிந்தது கேரளா.

‘கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த 17 பேர், பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் என 21 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது’ என கேரளா அரசு வெளிப்படையாக அறிவித்து தேடுதல் வேட்டையைத் துவங்கியது. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), மத்தியப் புலனாய்வு துறை (ஐ.பி) அதிகாரிகள் ரகசியமாய் விசாரணையை துவக்க... ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் சிக்கினர். இவர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்த அபு பஷீர்.

இவர்கள் 6 பேருக்கு ஐ.எஸ். இயக்கத்தில் ஆட்களைச் சேர்ப்பதுதான் பொறுப்பு என்றும் மாயமான 21 பேரை ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்தது இவர்கள்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கேரளா மட்டுமல்லாது, தமிழகத்தில் இருந்தும் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்க்க முயற்சிகள் நடந்து வருவதை அபு பஷீர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் போலீஸார். அதன் பின்னரே தமிழகத்தில் கோவை, சென்னை, நெல்லை என பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தினர். அபு பஷீர் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதல்நாள் 4 பேரைப்பிடித்து விசாரணையை துவக்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள், 4 நாட்களில் 11 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இன்னும் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக மத்தியப் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க செயல்பாடு இருப்பது அறிந்ததுதான். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ். அமைப்பின் தொடர்பில் இருந்து கைதாகி இருப்பதும், ஐ.எஸ். அமைப்பில் தமிழக இளைஞர்களைச் சேர்க்க அவர் முயன்றதும் இப்போதுதான் தெரியவந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த அபு பஷீரிடம் விசாரித்தபோது, அவருக்கு நெருக்கமான சிலர் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. மருத்துவக்கல்லூரி மாணவன், மெடிக்கல் ரெப் என 11 பேர் அப்துல் பஷீருடன் இயக்க வேலைகள் தொடர்பாக நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்களுக்கு ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்புள்ளதா... பயிற்சி ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்