துயர ஆட்சி! தூத்துக்குடி மாநகராட்சி...

ஊழல்

கராட்சியாக இருந்த தூத்துக்குடி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றதும் பெரிய பெரிய கனவெல்லாம் கண்டார்கள் தூத்துக்குடிக்காரர்கள். அடுத்தடுத்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே மேயர்களாக இருந்துள்ளனர் என்றாலும், மாநகர மக்களின் கனவுகள் இதுவரை நிறைவேறவில்லை. ஒரு காலத்தில் விலைமதிக்க முடியாத முத்துக்களை ஏற்றுமதி செய்த ஊர், தூத்துக்குடி. உப்பு உற்பத்தி, வெற்றிலை, கருப்பட்டி, மீன்பிடித்தல், விவசாயம், தொழிற்சாலைகள் என பல துறைகளிலும் சிறந்து விளங்கியதால், துறைமுகம், விமானநிலையம், நான்குவழிச்சாலை போன்ற வசதிகள் கூடுதலாக கிடைத்தன. தூத்துக்குடி நகராட்சிக்கு, 2008-ல் மாநகராட்சி அந்தஸ்தை கொடுத்தது தி.மு.க அரசு.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி ஆதரவுடன் சத்துணவு ஆயாவான கஸ்தூரிதங்கம் முதல் மேயராக வந்தார். கழிவுநீர்,  மழை நீரை வெளியேற்றுவதற்காக பக்கிள் ஓடைத் திட்டம், குடிநீர் தேவைக்காக நான்காவது பைப்லைன் திட்டம் போன்ற திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தார் அந்த மேயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்