மீண்டும் ‘கலப்பட பால்’ வைத்தியநாதன்! - அலறும் ஆவின்

ஆதிக்கம்FOLLOW-UP

வின் பால் கலப்பட வழக்கில் ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வந்த வைத்தியநாதன், ஆவின் பால் டெண்டரில் மீண்டும் கால் பதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

‘லாரிகளில் கொண்டுசெல்லப்படும் ஆவின் பால் கலப்படம் செய்யப்படுகிறது’ என்று வெளியான பகீர் தகவலால் 2014-ல் தமிழகமே அதிர்ந்தது. அது தொடர்பாக நடந்த விசாரணையில், ‘ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி அளவுக்கு ஆவின் பாலில் கலப்பட ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு உள்ளது. பாலுக்குப் பதிலாக, வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீர் அல்லது பவுடர் கலக்கப்பட்டு உள்ளது’ என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆவின் பால் ஊழலுக்குப் பின்னால் இருந்த வைத்தியநாதன் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த  அதிகாரிகள் சிலர் மீதும் நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இதுபற்றி ஜூ.வி-யில் தொடர்ந்து எழுதி உள்ளோம்.

தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.பால்வளத் துறை அமைச்சர் பதவி, மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பறிக்கப்பட்டது.  வைத்தியநாதனின் நிறுவனமான தீபிகா டிரான் ஸ்போர்ட், சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டு, கருப்பு பட்டியலில் அந்த நிறுவனத்தின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

2014-2016 ஆண்டு ஆவின் பால் டெண்டரை பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் சுமார் 275 டேங்கர் வாகனங்கள் தனியாரிடம் இருந்து இயக்கப் பட்டன. தற்போது, ஆவின் நிறுவனத்துக்கு என 66 டேங்கர் வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், 2016-2018-ம் ஆண்டு ஆவின் பால் டெண்டரில் 241 டேங்கர் வாகனங்களுக்குத் தனியாரிடம் இருந்து டெண்டர் விடப்பட்டு வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்