முதல்வர் பொறுப்பை யார் கவனிக்க வேண்டும்?

அலசுகிறார்கள் சட்ட நிபுணர்கள்...சட்டம்ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது? ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவ​மனையில் பார்த்தவர்கள் யார்? இவைதான் இன்றைய தமிழகத்தில், மில்லியன் டாலர் கேள்விகள்.

பதில் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தக் கேள்விகளால், தமிழகம்  குழப்பத்தில் மூழ்கி உள்ளது. இவ்வளவு சிக்கலான நேரத்தில், பரபரப்புகளுக்குப் பெயர்போன சுப்பிரமணியன் சுவாமி, ‘தமிழகத்தில் கவர்னர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்’ எனக் கொளுத்திப்போட்டார். இதையடுத்து, தமிழக அரசியல் அதகளமானது. கடந்த 7-ம் தேதி, அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கவர்னரைச் சந்திக்கப்போனபோது, அதகளம் ரணகளமாகிப்​போனது. அந்த நேரத்தில் ஃபேஸ்புக், ட்விட்டரில் புதிய முதலமைச்சர் யார் என்பது ட்ரெண்ட் ஆகியது. ஆனால், ‘காவிரிப் பிரச்னையைப் பேசினோம்’ என்று சொல்லி கவர்னர் மாளிகையில் இருந்து அறிக்கை வந்ததும் தற்காலிகமாக அந்தக் குழப்பம் முடிந்து உள்ளது.

இதுபோன்ற சூழலில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படுமா, பொறுப்பு முதலமைச்சரை நிச்சயம் நியமிக்க வேண்டுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, இதுபோன்ற அசாதாரணமான சூழல்களுக்கு முன்உதாரணங்கள் இருக்கின்றனவா என்று மூத்த வழக்கறிஞர்களிடம் கேட்டோம்.

உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி... உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர்... 

மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்: முதலமைச்சராக அண்ணா இருந்தபோது போக்குவரத்துத்​துறை அமைச்சராக இருந்தார் கருணாநிதி. அப்போது போக்குவரத்துத்துறையில்,கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தில்,  அமைச்சராக இருந்த கருணாநிதி கையெழுத்திடவில்லை. மாறாக, துறையின் செயலாளர் கையெழுத்துப்​போட்டார். இதை எதிர்த்து, சஞ்சீவி நாயுடு என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில்,  அமைச்சர் கையெழுத்துப் போடாததால், அந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்