கழுகார் பதில்கள்

படம்: எம்.விஜயகுமார்

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத​வாறு இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நட​வடிக்கைகளில் அரசு இறங்கவில்லை’ என்று ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே?

அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அவர்களுக்கு ‘தலைக்கு மேல்’ வெள்ளம் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் சென்னையைப் பற்றிக் கவலைப்பட எல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை!

ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம்.

‘ஜெயலலிதா கேட்டுக்கொண்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று சசிகலா புஷ்பா சொல்லி இருக்கிறாரே?

ராஜினாமா செய்யுங்கள் என்று சொன்ன பிறகும் ராஜினாமா செய்யாதவர் சசிகலா புஷ்பா. ‘மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் இந்தப் பதவிக்கு வந்தேன்’ என்றும் சொன்னவர் இவர். அப்படிப்பட்ட சசிகலா புஷ்பா, ‘ஜெயலலிதா கேட்டுக் கொண்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று எதனால் சொல்கிறார் தெரியுமா?  ஜெயலலிதா இப்போது கேட்டுக் கொள்ள மாட்டார் என்ற தைரியம் தான்!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பதை அறிய புகைப்படம் வெளியிட வேண்டும்’ என்று கருணாநிதி கேட்க, ‘இப்படி எல்லாம் கேட்பது சரியல்ல’ என்று திருநாவுக்கரசர் சொல்கிறாரே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்