மிஸ்டர் கழுகு : அப்போலோ அரசியல் ஆதாய மையம்!

‘‘அப்போலோ தான் இப்போது அரசியல் குவி மையம்” என்ற பீடிகையுடன் வந்து குதித்தார் கழுகார். அவரது ஃப்லோ குறைந்துவிடக்கூடாது என்பதால் நாம் குறுக்கிடவில்லை. கழுகாரே தொடர்ந்தார்!

‘‘செப்டம்பர் 22-ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் 3-ம் தேதிவரை, ஜெயலலிதாவின் உடல்நிலையை மையமாக வைத்தே பரபரப்பாக இருந்தது அப்போலோ.  அக்டோபர் 3-ம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அப்போலோவுக்கு வந்துவிட்டுப்போன பிறகு, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அடுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் முத்தரசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் வரிசையாக வந்தனர். அதன்பிறகு,  வைகோவும்  ஜி.ராம கிருஷ்ணன், ராகுல் காந்தி, அன்புமணி, ஜி.கே.வாசன் என அடுத்தடுத்து வந்தார்கள்.  அப்போலோவில் ஆஜர் போடாதது விஜயகாந்த் டீம் மட்டும்தான். அரசியல் நாகரிகம் கருதி எதிர்க் கட்சித் தலைவர்கள் வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.  ஆனால், அப்போலோ வாசலில் வைத்து, அவர்கள் கொடுக்கும் பேட்டிகளைப் படித்தால் பல விஷயங்கள் புரியவரும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்