உள்ளாட்சித் தேர்தல் உள்குத்து

வேடம் போடும் தி.மு.க. நாடகம் ஆடும் அ.தி.மு.க.தில்லுமுல்லு

“உள்ளாட்சி தேர்தலை தடை செய்ய தி.மு.க. ஒருபோதும் விரும்பியதில்லை. தேர்தலில் அ.தி.மு.க. செய்ய முயன்ற அக்கிரமங்களை நீதிமன்றத்தின் மூலம் தி.மு.க. தடுத்து நிறுத்தியிருக்கிறது’’ என சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதியும் வரவேற்றிருக்கிறார். ஆனால் அதை சொல்ல அவர்களுக்கு கொஞ்சமும் தகுதியில்லை. இவர்கள் ஆட்சியில் இருந்தபோது 2006 உள்ளாட்சியில் நடந்த தில்லுமுல்லுகளே சாட்சி. அப்போது தேர்தல் எப்படி நடந்தது? சின்ன ஃபிளாஷ்பேக்.

சென்னை மாநகராட்சியில் அப்போது 155 வார்டுகள் இருந்தன. 2006 அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றல், வாக்குப் பெட்டிகள் சூறையாடல் என வன்முறைகள் வெடித்ததால் அன்றையத் தினமே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை அவரது வீட்டில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி சந்தித்து முறையிட்டார். ‘தேர்தலில் தி.மு.க-வினர் திட்டமிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு போட்டனர். அதனால் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என வழக்கு போட்டது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்