இது எங்க ஏரியா உள்ளே வராதே!

நாராயணசாமிக்கு செக் வைக்கும் ஜான்குமார்...அரசியல்

“என் தந்தையைப் போன்ற நாராயணசாமிக்காக என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வது எனக்குப் பெருமை” என்று சொல்லி, பதவியைத் துறந்த நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஜான்குமார், ராஜினாமா விஷயத்தில் அவரசப்பட்டு விட்டோமோ என்ற ரீதியில் தன்னையே நொந்துகொண்டிருப்பதுதான் தற்போதைய பாண்டி பாலிடிக்ஸ்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் காங்கிரஸ் கைப் பற்றியது.  தேர்தலில் போட்டியிடாத  நாராயண சாமியை முதல்வராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இதனால், கட்சியின் மற்ற தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனால், நாராயணசாமியின் டெல்லி லாபிக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அவர்கள் அமைதி​யானார்கள். நாராயணசாமிக்காகத் தொகுதியை விட்டுக் கொடுக்காமல் எல்லோரும் எதிர்ப்புக் காட்டிவந்த நிலையில், வேறு வழியில்லாமல் நாராயணசாமியால் கட்சிக்குக் கொண்டுவரப்பட்ட நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்து தொகுதியை விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில்தான் முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்காகத் தொகுதியை விட்டுக்கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ-வான ஜான்குமாருக்கும் உரசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் கசியத் தொடங்கி உள்ளது. ஏதோ ஒரு நிர்பந்தத்தில் தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமார், தற்போது ஏக பீதியில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நெல்லித்தோப்பு தொகுதி மக்களிடம் நடத்திய குறைகேட்புக் கூட்டத்தின் போது, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களிடமும் நம் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அவர்களை நம் பக்கம் அழைக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் பேசியிருந்தார். நெல்லித்தோப்பு தொகுதியின்

அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் சிலரை கட்சியில் இணைக்க எடுத்த முயற்சிக்கு, தேர்தலில் தனக்கு எதிராக வேலை செய்தவர்களை கட்சியில் இணைப்பதா? என்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்தாராம் ஜான்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்