‘‘ஆணாதிக்கத்தை எதிர்த்த துணிச்சல்காரர்’’

நலம்அ.அருள்மொழி, வழக்கறிஞர்

த்தனையோ கருத்துக்களை எழுத நினைத்து நினைத்து... எழுதாமல் அல்லது, எழுத முடியாமல் போய்விட்டது. ‘இன்றாவது இதை எழுதேன்...’ என மனம் ஏனோ ஆதங்கத்துடன் என்னை உந்தித் தள்ளுகிறது.

முதல்வர் ஜெயலலிதா அவர்களை எப்போதும் மென்மையாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்திருக்கிறேன். அவர் முதல்முறையாக ஆட்சிக்கு வந்து தடா சட்டத்தைக் கொண்டு கடுமையான அடக்குமுறையை தமிழ் இன மொழி ஆதரவு செயல்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார். அந்த நேரத்தில், சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் தடா எதிர்ப்புக் கூட்டங்களில் நான் பேசியது, அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நான் கைது செய்யப்படலாம் என்ற சூழலும் இருந்தது.   ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அவருக்கு இரண்டு டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. அது பற்றி பெண் பிரபலங்களின் பேட்டிகள், ‘ஆனந்தவிகடன்’ இதழில் வெளிவந்தன. அதில் நான் மட்டுமே அவரது ஆட்சி முறை பற்றி கண்டனம் தெரிவித்திருந்தேன்.

திராவிட இயக்க அரசியல் கட்சி என்பதற்கான அத்தனை அடையாளங்களையும் அ.தி.மு.க அழித்துக்கொண்டதற்கு ஜெயலலிதா அவர்களின் தனிப்பட்ட கொள்கைகளே காரணம் என்பதும், காலில் விழுவது முதல் மண்சோறு சாப்பிடுவது வரை தமிழக அரசியல், கேலிக்கூத்தானதை அவர் அனுமதித்தார் என்பதும், பி.ஜே.பி தமிழ் நாட்டில் கணக்குத் தொடங்குவதற்குக் களம் அமைத்தார் என்பதும், அவர் மீதான கோபத்தை அதிகரித்தது. தி.மு.க எதிர்ப்பாளர்கள் அவசரப்பட வேண்டாம். இதே காரணங்களுக்காக தி.மு.க தலைவர்களை நேரடியாகவே விமர்சனம் செய்திருக்கிறேன். இனியும் செய்வேன். இந்த விமர்சனத்துக்கான கட்டுரையும் நேரமும் அல்ல இது.

இதையெல்லாம் தாண்டி, ஜெயலலிதா என்ற பெண் என் கண் முன் நிற்கிறார். நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது, பள்ளி ஆண்டுவிழாவில் ‘மலைநாட்டு மங்கையர் நடனம்’ என்று என்னையும், இன்னொரு மாணவியையும் நடனமாட வைத்தார்கள். ‘குறிஞ்சியிலே பூ மலர்ந்து’ என்பது பாடல். எங்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்தவர் அம்பிகா என்ற ஆசிரியையின் தங்கை. அவர் தன்னை ஜெயலலிதாவாக நினைத்து ஆடியபடி எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

பல ஆண்டுகள் கடந்து கல்லூரியில் ஆண்டுவிழா. வரவேற்பு நடனத்துக்குப் பொறுப்பான பேராசிரியர் பிருந்தா அவர்கள் என்னை அழைத்து, ‘பார்வதி வேடம் போட்டு சிவனுடன் ஆடுகிறாயா?’ என்று கேட்டார். ‘ஓ... ஆடுகிறேன்’ என்றேன். ‘வருகவே... வருகவே...’ என்பது பாடல். நடனம் கற்றுக்கொடுத்தபோது அந்தப் பேராசிரியர் சொன்னார்... ‘ஜெயலலிதா எப்படி ஆடுவாங்க தெரியுமா?’ என்று. ஆம். நடனம் அவரது விருப்பமான வெளிப்பாடு.

பள்ளிக்கூடத்தில் இருந்து திரைப்படத் துறைக்குள் தள்ளப்பட்டபோதும், தன் தனித்துவத்தை இழக்க விரும்பாத அவரது மிடுக்கு பலருக்கும் பிடித்தது. எனக்கும் மிகப்பிடித்தது. இரண்டு பெரும் கதாநாயகர்களின் சிறுமைத்தனம் நிறைந்த சீண்டல்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனியே சென்று ஆடுவார். ஒரு நிமிடம்தான் இருக்கும் அந்தத் தனி ஆட்டம். அட... ஆடும்போது பந்துபோல எம்பிக் குதிப்பார். அந்தத் துள்ளல் பார்ப்பவர்களையும் பற்றிக்கொள்ளும்.

ஜெயலலிதா அவர்களுக்குப் பாடும்போது பி.சுசீலாவின் குரலில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்துக்கொண்டே இருக்கும். “கதாநாயகர் களுக்குத்தான் அறிமுகப் பாடல் எழுதுவீர்களா? கதாநாயகியின் பெருமையைப் பற்றி எழுதமாட்டீர்களா?’’ என்று கவிஞர் கண்ணதாசனிடம் அவர் கேட்டதால், ‘சவாலே சமாளி’ படத்தில் அவருக்காக ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என்ற பாடல் எழுதப்பட்டதாக வியட்நாம்வீடு சுந்தரம் அவர்கள் ஒரு பேட்டியின்போது கூறினார்.

ஜெயலலிதா என்ற பெண்ணின் சுதந்திரத்தைத் திரையில் கேட்டு வாங்கிய அவரால், திரைக்குப்பின் உண்மை வாழ்க்கையில் எந்த அளவுக்குச் சுதந்திரத்துடன் வாழமுடிந்தது? என்ற கேள்விக்கு அவரால்தான் விடை சொல்ல முடியும். 1982-ம் ஆண்டில், ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகத்தின் நாயகியாக கடலூரில் அ.தி.மு.க மாநாட்டிலும், பின் மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கியபோதும், எளிமையான வெள்ளைப்புடவையில் அவரது அழகு வியப்பூட்டியது. அப்போதே அவர் பல்வேறு மனப்போராட்டங்களைக் கடந்துதான் வந்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்