அஜாக்கிரதை போலீஸ் அரங்கேறிய கொலை!

திருத்தணி திகு திகுக்ரைம்

மிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதற்கு இந்த சம்பவம் ஒர் உதாரணம். திருத்தணியில் பட்டப்பகலில் அ.தி.மு.க கவுன்சிலர் ‘ஆப்பிள்’ ஆறுமுகத்தை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் நகரையே நடுங்க வைத்துள்ளது.

திருத்தணி அ.தி.மு.க நகரச் செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சவுந்தரராஜனிடம் பேசினோம்.

“அ.தி.மு.க-வின் 13-வது வார்டு கவுன்சிலர் ‘ஆப்பிள்’ ஆறுமுகம். இவருக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட கட்சி, வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதியே அவரைக் கொலைசெய்ய முயற்சி நடந்தது. கடந்த 9-ம் தேதி அவர் காரில் சென்றபோது ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. முதல் முறை நடந்த கொலை முயற்சியின்போது ஆறுமுகத்தை வெட்ட வந்த கும்பலில் ஒருவரைப் பிடித்து அவர் திருத்தணி போலீஸில் ஒப்படைத்துள்ளார். அப்போது அவர், ‘எனக்கும், தன்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஆறுமுகம் பிடித்துக் கொடுத்த நபரை வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து வெளியே விட்டனர். அப்போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பிடித்துக் கொடுக்கப்பட்ட ஆளே மீண்டும் வந்து கொலை செய்திருப்பதுதான் வேதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்