திண்டுக்கல் மாநகராட்சி... தில்லாலங்கடி ஆட்சி!

ஊழல்

திண்டுக்கல் சிறப்பு நகராட்சி, 2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதியன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதுவரையிலும் சேர்மன் நாற்காலியில் இருந்த மருதராஜ், திண்டுக்கல் மாநகரின் தந்தை ஆனார். ஆரம்பக் காலத்தில், சிறிய விறகுக்கடை ஒன்றுதான் மருதராஜ் குடும்பத்துக்கான வாழ்வாதாரம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மருதராஜ் குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

நிழல் மேயர்!

“நகராட்சி சேர்மனாக மருதராஜ் பதவியேற்றது முதல், நிழல் மேயராக வலம் வரத் தொடங்கினார், அவரது மகன் பிரேம் என்ற வீரமார்பன். 2006-2011 காலகட்டத்தில் திண்டுக்கல் 8-வது வார்டு கவுன்சிலராக இருந்தார் மருதராஜ். அப்போதைய தி.மு.க சேர்மன் நடராஜன் உதவியுடன் வீரமார்பனுக்கு ஒப்பந்தங்கள் வாங்கிக்கொடுத்தார். இன்றைக்கு அ.தி.மு.க வசம் மாநகராட்சி இருக்கிறது. ஆனால், எந்த அ.தி.மு.க-வினருக்கும் ஒப்பந்தங்கள் கிடைப்பதில்லை” என வெம்புகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

49 கான்ட்ராக்ட்!

அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘‘தி.மு.க ஆட்சியில கவுன்சிலராக இருந்தபோதே, அப்போ சேர்மனா இருந்த தி.மு.க நகர்மன்ற தலைவர் நடராஜனை தாஜா பண்ணி, மகனுக்கு 49 கான்ட்ராக்ட்கள் வாங்கிக் கொடுத்திருக்காரு. எல்லா கான்ட்ராக்ட் களும் பிரேம் பினாமிகளுக்குத்தான் போகுது. பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை மோசடியா நடத்தியிருக்காங்க. கான்ட்ராக்ட் வேலைகளை கவுன்சில் கூட்டத்துல வெச்சு முறையா ஒப்புதல் வாங்குறது கிடையாது. இவங்களா வேலை பார்த்துட்டு, ‘முன் அனுமதி பெற்று’ங்கிற வார்த்தையை மட்டும் அஜெண்டா புக்ல சேர்த்துக் குவாங்க. இப்போ, உள்ளாட்சியில அடிமட்டத் தொண்டனுக்குக் கிடைக்க வேண்டிய கவுன்சிலர் வாய்ப்பையும் தனக்கு வேண்டியவங்களுக்கே கொடுத்திட்டாங்க. அதனால இந்த முறை மாநகராட்சி அ.தி.மு.க கையை விட்டுப் போயிடு மோன்னு எங்களை மாதிரி கட்சிக்காரங்க கவலையா இருந்தோம். நல்லவேளையா தேர்தலை தள்ளி வெச்சுட்டாங்க’’ என்றார் ஆதங்கத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்