மசாஜ் சென்டர்... மந்திரியின் ‘மன்மத’ பி.ஏ.!

அசிங்கம்

ட்டுமொத்த அ.தி.மு.க-னரும் அப்போலோவிலும் ஜெயலலிதாவின் உடல்நலத்திலும் கவனம் கொண்டிருக்கும் இந்த நேத்தில், ‘அமைச்சரின் உதவியாளர் விபசார பிசினஸில் ஈடுபட்டார்’ என்று கர்நாடகத்தி​லிருந்து கிளம்பியிருக்கும் புகார்  கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண​ ரெட்டியைச் சிக்கலில் சுழலவிட்டிருக்கிறது.

பெங்களூருவில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பல இடங்களில் விபசாரம் நடந்துவருகிறது. வேலைவாங்கித் தருவதாக வட மாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்துவந்து விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்று பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸாருக்குக் கடந்த வாரம் ரகசிய தகவல் கிடத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் பெங்களூருவின் பல இடங்களில் ‘ரெய்டு’ நடத்தத் திட்டமிட்டது பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸ். பாசனவாடி என்கிற இடத்தில், ‘ஹேப்பி எண்டிங்’ என்கிற பெயரில் செயல்பட்டுவந்த பாடி டூ பாடி மசாஜ் சென்டருக்குள் சோதனைபோட போலீஸார் நுழைய... அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு இருந்த 11 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் மட்டும் ‘நான் யார் தெரியுமா? தமிழ்நாடு மினிஸ்டரோட பி.ஏ’ என்று கர்நாடக போலீஸிடம் உறுமியுள்ளார். காவிரிப் பிரச்னையில் கடுப்பில் இருக்கும் பெங்களூரு போலீஸார், அவரை ஸ்பெஷலாகக் கவனித்து, வண்டியில் ஏற்றி வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி, உறுமியவர் தமிழகக் கால்நடைத் துறை அமைச்சரின் பொலிட்டிக்கல் பி.ஏ-வான ஓசூரைச் சேர்ந்த சத்யநாராயணா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்