முதல்வர் உடல்நிலை... வதந்திகள்... காக்கிகள்!

குற்றம்

சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உடல்நலம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சூறாவளியாய் சுழன்றடிப்பது உண்டு. குறிப்பாக, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த வதந்தி பலமுறை பரவியிருக்கிறது. நடிகர்கள் கவுண்டமணி, ஆனந்தராஜ், செந்தில், பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோரின் உடல்நலம் பற்றிய வதந்திகளும் சமீபத்தில் வந்து அடங்கியது.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும் இதேபோன்ற வதந்திகள், பல வடிவங்களில் திடீர் திடீரெனக் கிளம்பி வருகின்றன. “நான் நலமாகி விட்டேன். விரைவில் வீடு திரும்புவேன்’’ என்று ஜெயலலிதா குரலைப் போன்ற பாசிட்டிவ் வாய்ஸ், ஜெயலலிதா உடல்நலம் குறித்த நெகடிவ் வாய்ஸ் என தொடர்ச்சியாக இரு ஆடியோக்கள் பரவின. இதுகுறித்து கடந்த 4-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க-வின் ஐ.டி. பிரிவுச் செயலாளர் ராமச்சந்திரன் ஒரு புகார் அளித்தார். கடந்த எட்டாம் தேதி நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்கமல் உள்ளிட்ட சிலரும் இதே விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த 10-ம் தேதி இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

“முதல்வர் தொடர்பாக கிளம்பும் வதந்தி குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலீஸ் துணை கமிஷனர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் விசாரணை நடந்தது. தன் முகநூல் பக்கத்தில் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக சில பதிவுகளை வெளியிட்டு இருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற மென்பொறியாளர் கைது செய்யப்பட்டார். முதல்வரின் உடல்நிலை குறித்து வலைதளத்தில் வதந்தியைப் பரப்பியதாக, மதுரையைச் சேர்ந்த மாடசாமி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதே குற்றச்சாட்டின் கீழ், சென்னையில் சதீஷ்குமார் என்பவரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து ஆடியோக் களை வெளியிட்டும், நெகடிவ் ஆன தகவல்களை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டதாக மேலும் 43 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். இதுபோல வதந்திகளைப் பரப்பினால் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது” என்கிறது போலீஸ் வட்டாரம்.

ஆன்லைன் வதந்தி... சட்டம் என்ன சொல்கிறது?

தற்போது, சமூகவலை தளங்களின் செயல்பாடுகள் மீடியாக்களையே மிஞ்சும் வேகத்தில் இருக்கின்றன. அவை நன்மை, தீமை என இருவிதமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இதுபற்றி சட்டம் என்ன சொல்கிறது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்