தனிக்குடித்தனம்... மனைவிகளை மிரட்டும் தீர்ப்பு...

அலசுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்...

‘வயதான பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல கணவனிடம் மனைவி வற்புறுத்தினால், அவரை விவாகரத்து செய்ய இந்து மதச்சட்டத்தில் இடம் உள்ளது’ என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த நரேந்திரன் மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோருக்கு இடையிலான விவாகரத்து வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ‘தனது பெற்றோரைப் பிரிந்து மனைவியுடன் தனிக்குடித்தனம் செல்ல மறுத்த காரணத்தால், தற்கொலை  செய்து கொள்ளப்போவதாக மனைவி மிரட்டுகிறார். எனவே, என் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்’  என்று நரேந்திரன் வழக்குத் தொடர்ந்து இருந்தார். மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ்  கொண்ட அமர்வு விசாரித்தது. 

“வயதான நிலையில், அதுவும் வருவாய்க்கு வழி இல்லாத நிலையில் பெற்றோர் இருக்கும்போது, எந்த ஓர் இந்து மகனும் தன் பெற்றோரைப் பிரிந்து செல்லக்கூடாது. கணவனின் வருவாயை மனைவி மட்டுமே அனுபவிக்க நினைப்பதும் கொடுமை யானது. வலுவான ஆதாரங்கள், காரணங்கள் இல்லாமல் கணவனை பெற்றோரை விட்டுப் பிரித்துச் செல்வது கலாசாரத்துக்கு எதிரானது. அவ்வாறு மனைவி தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால், அவரை விவாகரத்து செய்ய இந்துமதச் சட்டத்தின்படி கணவருக்கு உரிமை உண்டு” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். இந்தத் தீர்ப்பைக் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்