‘‘மணிக்கூண்டு கடிகாரத்தையும் ஓடவைக்கும்!’’

தகவல் அறியும் சட்டம் தடாலடி

மிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற காவல் துறை இயக்குநர் ராமனுஜத்தை நியமித்தபோது, ‘அவர் காவல் துறையில் உளவுப் பிரிவில் பல வருடங்களாகப் பணியாற்றியவர். அவர் ரகசியங்களைப் பெட்டிப் பாம்பாகப் பாதுகாக்கக் கூடியவர். தகவல்களை வெளியிடும் பணியில் அவரை நியமித்தால் தகவல் ஆணையம் என்ன ஆகும்’ என எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தகவல் சட்ட வார விழாவில் தகவல் ஆர்வலர்கள், சட்ட மாணவர்கள், பொது தகவல் அலுவலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் வருடம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் அறிவுறுத்தல் மற்றும் நிதியுதவியின்படி தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா, அக்டோபர் 6 முதல் 12 வரை சென்னை அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவன கலையரங்கில் நடைபெற்றது. இதில் மாநில தலைமை தகவல் ஆணையர் ராமனுஜம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர் சந்துரு, சட்டப் பல்கலைக்கழக துணை​வேந்தர் ப.வணங்காமுடி, அண்ணா மேலாண்மை இயக்குநரும் கூடுதல் தலைமைச் செயலருமான ஸ்காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்பு உணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற சட்டப் பல்கலைக்கழக மாணவிகளுக்குப் பரிசளித்துப் பேசிய நீதியரசர் சந்துரு, ‘‘ஆர்.டி.ஐ. சட்டம் மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் 1923-ம் வருட ரகசியக்காப்புச் சட்டத்தின்படி மக்கள் எவ்வித தகவலையும் அரசு அதிகாரி களிடம் இருந்து பெற முடியாது. ஆனால், தற்போது உணவுக் கிடங்கில் அரிசி எவ்வளவு இருப்பு உள்ளது, இன்று அலுவலகத்துக்கு எத்தனை பேர் வந்து இருக்கின்றனர்... போன்ற தகவல்களையும் அரசு அலுவலங்களில் இருந்து பெற முடியும். அதுதான் இந்தச் சட்டத்தின் சிறப்பு. மும்பையில் ஒரு பழக்கடைக்காரர், தன் கடை முன்பு இருந்த மணிக்கூண்டில் கடிகாரம் ஏன் ஓடவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டு இருந்தார். இரவோடு இரவாக அதைச் சரிசெய்துவிட்டு, கடிகாரம் ஓடிக்கொண்டு​தான் இருக்கிறது என உடனடியாக பதில் அளித்தனர் அதிகாரிகள். இதுபோன்ற நல்ல காரியமும் சில சமயங்களில் ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் ஏற்படும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்