‘‘அக்காவை யார் பார்த்துக்கொள்வது?’’

நாத்தனார் மறைவு... தவித்துப்போன சசிகலா!துயரம்

ஜெயலலிதாவை நிழல்போல இருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார் சசிகலா. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தில் ஒரு இறப்புச் செய்தி. சசிகலாவின் நாத்தனார்... அதாவது நடராஜனின் அக்கா வனரோஜா இறந்து போனார். சோகத்தில் இருக்கிறது நடராஜன் குடும்பம்.

தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் கிராமத்தில் வசித்துவந்தார் வனரோஜா. நுரையீரல் பிரச்னைக்காக சிகிச்சைப் பெற்றுவந்த இவர், சிகிச்சைப் பலனின்றி கடந்த 11-ம் தேதி இரவு உயிரிழந்தார். இந்தத் தகவல் அப்போலோவில் உள்ள சசிகலாவுக்குச் சொல்லப்பட்டது. ‘‘இப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்காவை விட்டுவிட்டு நான் அங்கு வந்தால் இங்கு யார் அக்காவைப் பார்த்துக்கொள்வது? தேவையில்லாத சர்ச்சைகள் கிளம்பாதா?’’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். ஆனாலும் சசிகலா எப்படியாவது வந்துவிடுவார் என்று அவரது உறவினர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்