சென்னை மாநகராட்சி... செயல்படாத ஆட்சி!

ஊழல்

2011-ல் உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது, சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியால் துவண்டு போயிருந்த சைதை துரைசாமியை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றிபெற்று மேயர் நாற்காலியில் அமர்ந்த சைதை துரைசாமி, பல திட்டங்களை அறிவித்தார். அந்த அறிவிப்புகள், ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும், வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன.

முதல் ஆண்டிலேயே மூடுவிழா!

துரைசாமி மேயர் ஆனதும், ஒவ்வொரு வார்டிலும் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலா 90 ஆயிரம் ரூபாய் செலவில் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. ‘குப்பையை அகற்றுவதற்கு மாறாக, குப்பையை மேயர் ஒளித்துவைக்கிறார்’ என விமர்சனம் எழுந்தது. முதல் ஆண்டிலேயே பல மையங்கள் மூடுவிழா கண்டன.

பாலமும்... பரிதாபமும்.!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஏழு மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.  தெற்கு உஸ் மான்- வடக்கு உஸ்மான் இணைப்பு பாலம், ஈகா தியேட்டர்-வள்ளுவர் கோட்டம் இடையே ஒருங்கிணைந்த  மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம், கோட்டூர்புரம் சந்திப்பில் பாலம் என ஏழு பாலங்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலம் கூட கட்டப்படவில்லை. மேலும், தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்கள்கூட முழுமையாக முடிக்கப்படவில்லை.

24 சாலை அறிவிப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்