திருவண்ணாமலை நகராட்சி... சாக்கடை ஆட்சி!

ஸ்கேன்

ன்மிக ஸ்தலம் என்றால் கடவுள் பக்தி, சுத்தமான சுற்றுப்புறம், தூய்மையான காற்று ஆகியவை அமையப் பெற்றிருக்கும். ஆனால், ஆன்மிக நகரமான திருவண்ணாமலையிலோ, எல்லாமே தலைகீழ்.

திருவண்ணாமலை நகராட்சி, தொடர்ந்து மூன்று முறை தி.மு.க வசம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், நகராட்சியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என சொல்லிதான் 2011-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாலச்சந்தருக்கு மக்கள் ஓட்டுபோட்டனர். ஆனால், அவர்களுக்கு பாலச்சந்தர், நெற்றி நிறைய நாமம்தான் போட்டார்.

39 வார்டுகள் கொண்ட திருவண்ணாமலை நகராட்சியில் பெரிய பிரச்னை, பாதாள சாக்கடை திட்டம். தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பாதியிலேயே முடங்கிப்போனது. `நகராட்சி தலைவராகப் பொறுப்பேற்றவுடன் ‘முதல் வேலையாக பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பேன்’ என கொடுத்த வாக்கை மறந்தே போனார் பாலச்சந்தர். கிரிவல பாதையைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் பாதி குளங்கள் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. மீதி உள்ள குளங்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. கிரிவலப் பாதையில் பக்தர்கள் பயன்படுத்தி வந்த அக்னி தீர்த்தகுளம் சில, ஆண்டுகளில் சாக்கடை குளமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்