மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் யுனிகோடு!

ஆன்லைன் தீர்ப்புகளுக்கு அங்கீகாரம்...சட்டம்

நீதித் துறைக்குள் ஒளிந்து கிடக்கும் புதிர்களும், மர்ம முடிச்சுகளும், ராணுவ ரகசியங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. அந்த மர்ம முடிச் சுகளை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, ‘யுனிகோடு’ என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நீதிபதிக்கும் சிறப்புக் குறியீடு அடையாள எண்கள் வழங்கப்பட உள்ளன. இதன் விளைவாக, நீதிபதிகளின் தரம் ஆவணப்படுத்தப்படும். மேலும், ஆன்லைனில் உள்ள நீதிபதிகளின் தீர்ப்புகள், சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறும்.

நீதிபதிகளின் தரம்

நீதிபதிகளுக்கான யுனிகோடு என்பது, ஒரு நீதிபதி, பணியில் இருக்கும்போது விசாரித்த வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு வழக்கில் தீர்ப்பளிக்க அந்த நீதிபதி எடுத்துக்கொண்ட காலம், ஒரு நீதிபதி தள்ளுபடி செய்த வழக்கு களின் எண்ணிக்கை, தீர்ப்பளித்த வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பதிவுசெய்வ தற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நீதிபதியின் தரம் கண் காணிக்கப்படும். நீதித்துறை நடவடிக்கை களை ஆவணப்படுத்தி வைக்கும், தேசிய நீதித் துறை புள்ளிவிவர அமைப் பிடம் (National Judicial Data Grid), இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் முக்கியமானத் தீர்ப்புகள் பற்றிய விவரங்கள் உள்ளன. ஆனால், நீதிபதிகள் பற்றிய தனித்தனி ஆவணக்குறிப்புகள் இதுவரை இல்லை. குறிப்பாக, ஒரு நீதிபதி தன் பணிக்காலத்தில் எத்தனை வழக்குகளை விசாரித்தார், எத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளித்தார், எத்தனை வழக்குகளைத் தள்ளுபடி செய்தார் போன்ற விவரங்கள் இல்லை. நீதிபதிகளுக்குத் தனித்தனி யுனிகோடு வழங்கப்பட்டுவிட்டால், இந்த விவரங்களும் துல்லியமாகக் கணக்கில் கொள்ளப்படும்.

ஆன்லைன் தீர்ப்புகளுக்கு அங்கீகாரம்

நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் தற்போது உடனுக்குடன் ஆன்லைனில் பதிவுசெய்யப் படுகின்றன. அதை  யார்  வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால், ஆன்லைனில் பதிவு செய்யப்படும் தீர்ப்புகளுக்கு சட்ட அங்கீகாரம் இதுவரை கிடையாது. அதாவது, ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை, வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆன்லைனில் இருந்து, டவுண்லோடு செய்துகொண்டுபோய், அரசாங்க அலுவலகங்களில் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்து, தனக்காக நிவாரணத்தைக் கேட்க முடியாது. ஏனென்றால், அரசு அலுவலகங்களில், ‘certified copy’ என்று சொல்லப்படக்கூடிய, கையெழுத்து மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் கூடிய நகலைக் கேட்பார்கள். அதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எத்தனை நகல்கள் தேவையோ, அத்தனைக்கும் பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு, நகல் எடுக்கப் பட்ட ஒவ்வொரு பக்கத்திலும், நீதிமன்றப் பதிவாளர் கையெழுத்துப் போட வேண்டும். நீதிமன்ற முத்திரை வைக்கப்படவேண்டும். அதன்பிறகு, அதைக் கொடுத்தால்தான், அரசு அலுவலகங்களில், சிறைத் துறையில் வேலை நடக்கும். ஆனால், நீதிபதிகளுக்கான யுனிகோடு முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்த சிக்கல் தீர்ந்துவிடும்.

யுனிகோடு சிறப்பு

ஒவ்வொரு நீதிபதிக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம், தேசிய நீதித் துறை தகவல் மையத்தில் உள்ள சர்வரில் நுழைந்து, நீதிபதிகள் தங்களின் தீர்ப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம். அதில், எலக்ட்ரானிக் கையெழுத்துப் போடும் வசதியும் உள்ளது. அந்தக் கையெழுத்துக்கு சட்ட அங்கீகாரம் உண்டு. இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்ப்புகளை சம்பந்தப்பட்டவர் தரவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் கொடுக்கலாம். அவர்கள், இதே தீர்ப்பை, டவுண்லோடு செய்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து நிவாரணத்தை வழங்குவார்கள். இதன்மூலம் நிறைய பொருள் செலவும், கால விரயமும் தவிர்க்கப்படும். 

இதுபற்றி விரிவாக அறிந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் கேட்டோம்.

காலத்தின் கட்டாயம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்