மிஸ்டர் கழுகு : ராஜாத்தி சொன்ன யோசனை!

ப்போலோ விசிட் முடித்து அலுவலகம் வந்த கழுகாரிடம் மணமணக்கும் ஏலக்காய் டீயை நீட்டினோம். சூடான டீயை உறிஞ்சியவாறே, கொண்டுவந்த தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘அப்போலோ மருத்துவமனை அரசியல்வாதிகள் ‘அட்டென்டன்ஸ்’ போடும் இடமாக மாறிவிட்டது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்போலோ வந்ததுதான் அரசியல் அரங்கில் பரபரப்பு பேச்சாக அடிபடுகிறது.’’

‘‘அவர் வந்ததன் பின்னணி என்னவாம்?’’

‘‘கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போர்தான் காரணம் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே தி.மு.க உள்கட்சிப் பிரச்னை, தேர்தல் முடிவு, சட்டசபை நடவடிக்கை என எல்லாவற்றிலும், கருணாநிதிக்கு எதிர் நிலையை எடுக்கிறார் ஸ்டாலின். அதனால்தான், தனது வழக்கமான பாணியில் அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்து​கிறார் கருணாநிதி.’’

‘‘எப்படி சொல்கிறீர்?’’

‘‘ஜி.கே. வாசனை தி.மு.க கூட்டணியில் சேர்க்கும் முயற்சியாக, ஸ்டாலின் - ஜி.கே. வாசன் சந்திப்பு நடைபெற்றது. உடனே, கருணாநிதி, திருநாவுக்கரசரை வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்தார். அதோடு, ஜி.கே.வாசன் - மு.க.ஸ்டாலின் முயற்சி ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தது. ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து, அரசியல் செய்ய விரும்பவில்லை என ஸ்டாலின் கூறினார். ஆனால், ‘அ.தி.மு.க தொண்டர்களின் கவலையைப் போக்க, முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும்; பொறுப்பு முதல்வரை அறிவிக்க வேண்டும்’ என கருணாநிதி அறிக்கை கொடுத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கவனிப்பார் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டதும், அதைப் பாராட்டினார் மு.க.ஸ்டாலின். ஆனால், கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநர் சொல்வதுபோல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலின் பேரில்தான் பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார். இப்படி ஒவ்வொன்றிலும் தந்தைக்கும் மகனுக்கும் முட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில், அப்போலோ மருத்துவமனைக்குப் போய், ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் மு.க.ஸ்டாலின். இந்த செய்திக்குப் பரவலான விளம்பரம் கிடைத்ததும் ராஜாத்தி அம்மாள்  அப்போலோவுக்கு சென்று தன்னையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.’’

‘‘ராஜாத்தி அம்மாள் சசிகலாவைச் சந்தித்தாரா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்