“காங்கிரஸார் எல்லோரும் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள்”

தி.மு.க-வை உரசிய திருநாவுக்கரசர்கூட்டணி

மிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனியாகக் கச்சை கட்ட ஆரம்பித்துவிட்டதோ என்கிற சந்தேகத்தை கிளப்பி விட்டது திருச்சியில் நடந்த உண்ணாவிரதம்.

காவிரியில் தமிழகத்துக்கு துரோகம்செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது காங்கிரஸ். அங்கே தி.மு.க கூட்டணிக்கு எதிராக அதிரடிகள் கிளம்பின. குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, தனுஷ்கோடி ஆதித்தன், யசோதா, டாக்டர் செல்லக்குமார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையே வந்து சேர்ந்தார் ப.சிதம்பரம். ‘அடுத்து இளங்கோவன் வருவாரா’ என பத்திரிகை​யாளர்கள் கேட்டதற்கு, ‘உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இளங்கோவன் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை’ எனச் சமாளித்தார் திருநாவுக்கரசர். அதேநேரம் இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்து அங்கு மீடியாவிடம் பேட்டிக்கொடுத்தார். இதேபோல் குஷ்புவும் உண்ணாவிரத்தில் கலந்துகொள்ளவில்லை.

“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்றுக் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது. மத்திய அரசு முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கூறிவிட்டு, அடுத்து வாரியம் அமைக்க முடியாது என மறுத்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. இதுதொடர்பாகப் பிரதமரைச் சந்திக்கப்போன தமிழக எம்.பி-க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமல்ல... தமிழக மக்களையே அவமானப்படுத்தியுள்ளார் மோடி. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்ட​போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து பார்த்தார். அதுபோல முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வந்து பார்த்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை” என்றார் திருநாவுக்கரசர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்