‘‘துரோகத்தின் உச்சம்!’’

சசிகலா புஷ்பாவை விளாசும் வைகை செல்வன்பேட்டி

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால், தமிழக அரசு முடங்கிப்போயிருக்கிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது?’’

‘‘அம்மா நலமாக இருக்கிறார். இயல்பாகவே துணிச்சலும் மன உறுதியும் நிரம்பப் பெற்றவர் அம்மா அவர்கள். இதற்கு முன்னர், சந்தித்த தடைகள் அனைத்தையும் தகர்த்து எறிந்து வந்தது போல இம்முறையும் மீண்டு வருவார். நம்பிக்கையோடு காத்திருங்கள்’’.

‘‘அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு எதிராக இயங்கி வருகிறாரே?’’

‘‘ ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்ற குறள் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், அதோடு முடித்துக்கொள்ள மனம் மறுக்கிறது. துரோகத்தின் உச்சம்தான் அந்த உதிர்ந்த புஷ்பம். மாநகர மேயர், மாநிலங்களவை உறுப்பினர், மகளிர் அணிச் செயலாளர் என உயர்த்திப் பார்த்த ஏணியை உதறி எறிந்த செயல் மன்னிக்க முடியாத பஞ்சமா பாதகச் செயல். இன்று புஷ்பாவுக்கு இருக்கும் முகவரி எங்கள் அம்மாவால் வழங்கப்பட்டதுதான். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற வாக்கைத் தூர எறிந்துவிட்டுத் துரோகம் செய்தவர். பொது வெளியில் கண்ணியம் எப்போது களங்கப்படுத்தப்​பட்டதோ அப்போதே அம்மா அவர்கள், தன் இதயத்தில் இருந்து அவரைத் தூக்கி எறிந்துவிட்டார். மாநிலங்களவை உறுப்பினர் என்ற பொறுப்பு​ உணர்வையும் தாண்டி, அவர் நடந்துகொண்ட விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. அதனால் அம்மா அவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால், இதில் தொடர்புடைய தி.மு.க உறுப்​பினரை அவர் சார்ந்த இயக்கத்தின் தலைமை, பெயரளவுக்குக் கூட கண்டிக்க வில்லை. அண்ணா, உதிரம் கொடுத்து உருவாக்கிய இயக்கம், கருணாநிதி காலத்தில் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது. இனி அவர் தனயன் காலத்தில் எப்படி போகுமோ என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்