‘‘ஆமா... நான் இறந்துட்டேன்!’’

இது சுஜாதாவின் கதை!சோகம்

 

‘‘கொஞ்ச நேரத்தில் நான் செத்துப் போயிடுவேன். அதற்குள் என் கதையை உங்களிடம் சொல்லிவிடுகிறேன். என்னோட பெயர் சுஜாதா, வயசு 30. அப்பா இல்ல. உடம்பு முடியாத அம்மா மட்டும் இருக்காங்க. குடும்ப கஷ்டம். அதனால சின்ன வயசுலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். புதுக்கோட்டை அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் சமையல் உதவியாளராக 2013-ம் வருஷம் ஆரம்பத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவியர் விடுதிக்கு மாத்திட்டாங்க. என் சம்பளம்தான் வீட்டுக்கு சோறு போடுகிறது. விடுதிக்குப் பக்கத்துல வீடு இருந்ததால வேலைக்குப் போய்ட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன். கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்குப் போய்ட்டா அம்மாவைப் பாத்துக்க முடியாதுனு கல்யாணம்கூட பண்ணிக்கல. இப்படியே போய்க்கிட்டிருந்த என் வாழ்க்கையில ஒரு சோதனை. விடுதியில இருந்த காவலாளி வேலையைவிட்டு போயிட்டாரு. விடுதியும் கிட்டத்தட்ட காட்டுக்குள்ளதான் இருக்கு. விடுதியில இருக்குற பெண்களை இரவில் பாத்துக்கச் சொல்லி என்னிடம் அதிகாரிகள் சொன்னாங்க. நானும் பாத்துக்கிட்டேன். இதுல என்ன ஒரு கொடுமைனா... இங்க சமைக்கவும் ஆள் கிடையாது. அதனால காலையில இருந்து இரவு வரைக்கும் சமையல் செஞ்சுட்டு இரவில் காவலாளி வேலையையும் பார்த்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்