மிஸ்டர் மியாவ்

உதயநிதி - எழில்

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் வாயிலாக இளைய தளபதி விஜய்க்கு பிரேக் கொடுத்த திறமைசாலி இயக்குநர், எழில். இவரது இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ என்கிற முழுநீள நகைச்சுவை படம் தயாராகி வருகிறது. ‘ச.இ.ப’-வுக்காக நாயகி ரெஜினாவுடன் டூயட் பாடலில் ஆடிப்பாடிவிட்டு காரைக்காலில் இருந்து திரும்பியிருக்கிறார், உதயநிதி.

அருண்விஜய் - அறிவழகன்

ராதிகா மகளின் கல்யாண பார்ட்டியில் பொண்ணு மாப்பிள்ளையைவிட பரபரப்பாகப் பேசப்பட்டவர்  கான்ட்ரவர்ஸி கதாநாயகன் அருண்விஜய். உண்மையில், போலீஸ் வாகனம் மீது மோதிய அருண்விஜய், சின்சியர் போலீஸ் ஆபீஸராக நடிக்கும் திரைப்படம் ‘குற்றம் -23’. இதை, ‘ஈரம்’ அறிவழகன் இயக்கி வருகிறார். ‘க்ரைம் கில்பர்ட்’ ராஜேஷ்குமாரின் நாவல்தான் படத்தின் கதை. பொதுவாக, மருத்துவத் துறையில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகளைத் துகிலுரித்து காட்டுகிறது ‘குற்றம் -23’.

லாரன்ஸ் - கே.எஸ்.ரவிக்குமார்

வழக்கமாக சினிமாவில் ஹீரோக்களை தேடிப்போய் டைரக்டர்கள் கதை சொல்லுவார்கள். சமீபத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை சந்தித்த லாரன்ஸ், ‘சார் நீங்க ரஜினிசார், கமல்சாரை எல்லாம் இயக்கிய லெஜண்ட். உங்க டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப​நாளா ஆசை ப்ளீஸ்சார்’ என்று கெஞ்சியிருக்கிறார், லாரன்ஸ்.  எப்போதும் கஞ்சிப்​போட்ட கதர்​சட்டையாக விரைத்து நிற்கும் ரவிக்குமார், வெயிலில் வைத்த ஊத்துக்குளி வெண்ணெயாய் உருகி​விட்டராம்.

விஜயசேதுபதி - பன்னீர் செல்வம்

அப்பாவி வேஷம், அடவாடி, கிராமத்து டாக்டர் என்று படத்துக்கு படம் விதவிதமான வேஷங்களில் நடித்துவரும் விஜயசேதுபதி, அடுத்து  கூலிப்படை ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் பன்னீர் செல்வத்துடன் கை கோக்கிறார். ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் , இதுவரை தமிழ்சினிமா பார்க்காத வேறுவித கேரக்டரில் விஜய்சேதுபதிக்கு கதையை வடிவமைத்து இருக்கிறார். பன்னீர் சொன்ன கதையைக் கேட்டதும் படக்கென கட்டிப்​பிடித்து டபுள் ஓ.கே சொல்லி விட்டார், வி.சேதுபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்